மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

நாளை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் ஜனவரி 8ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (ஜனவரி 7) திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருக்கிறது.

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 8ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இதுபற்றிய விவாதம் ஜனவரி 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடக்கவிருக்கிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், இதில் கலந்துகொள்ள எல்லா கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் கொறடா சக்கரபாணி அறிக்கை வெளியிட்டுள்ளார். ”திமுக செயல்தலைவர் மற்றும் சட்டசபை எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்கவுள்ளது. இதில் அனைத்து உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

திமுக எம்எல்ஏக்கள் நடந்துகொள்ள வேண்டிய விதம், சட்டமன்றத்தில் எந்தெந்த பிரச்சனைகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

அதேபோல, நாளை காலை 10 மணியளவில் திமுக மாவட்டச் செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெறுமென அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன். இதில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும் கழகத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து இதில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. சட்டமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், அதற்கேற்ற வகையில் இந்த கூட்டம் நிகழும் என்று சொல்லப்படுகிறது.

ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினராக தினகரன் வெற்றி பெற்றது மற்றும் அவருக்கு ஆதரவாக இருந்த 18 அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளுக்குப் பிறகு, இப்போதுதான் முதன்முறையாக சட்டமன்றம் கூடுகிறது. சட்டமன்றத்தில் அதிமுகவின் பெரும்பான்மை இழப்பு, அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்த கேள்விகள் இந்த கூட்டத்தொடரில் எழுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018