மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

இழப்பீட்டு வரியாக ரூ.38,000 கோடி வசூல்!

இழப்பீட்டு வரியாக ரூ.38,000 கோடி வசூல்!

சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறையின் கீழ் ஜூலை - நவம்பர் மாதங்களில் இழப்பீட்டு வரியாக ரூ.38,000 கோடிக்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜூலை மாதம் 1ஆம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) திட்டத்தின் கீழ் ஆடம்பரப் பொருட்களுக்கும், புகையிலை உள்ளிட்ட பொருட்களுக்கும் அதிகபட்ச வரியாக 28 சதவிகித வரி விதிக்கப்பட்டது. இப்பொருட்களுக்கு இழப்பீட்டு வரியும் மத்திய அரசு விதித்திருந்தது. அதன்படி, ஆடம்பரப் பொருட்களுக்கான இழப்பீட்டு வரியாக ரூ.38,073 கோடியை ஜூலை - நவம்பர் மாதங்களில் மத்திய அரசு வசூலித்துள்ளதாக மக்களவையில் மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். இதில், ஜூலை மாதத்தில் ரூ.7,201 கோடியும், ஆகஸ்ட் மாதத்தில் ரூ.7,850 கோடியும், செப்டம்பர் மாதத்தில் ரூ.8,014 கோடியும், அக்டோபர் மாதத்தில் ரூ.7,160 கோடியும், நவம்பர் மாதத்தில் ரூ.7,848 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018