மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

செங்கோட்டையனை அடுத்து செல்லூர் ராஜு

செங்கோட்டையனை அடுத்து செல்லூர் ராஜு

செங்கோட்டையனைத் தொடர்ந்து, அமைச்சர் செல்லூர் ராஜுவிடமிருந்த சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டுள்ளதாகவும். அப்பதவிக்குத் துணை முதல்வர் பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை அவை முன்னவர் பதவியிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாகத் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பு மற்றும் ஆட்சி மன்றக் குழுவிலும் சேர்க்கப்படாமல் செங்கோட்டையன் ஓரங்கட்டப்பட்டார். தற்போது அவை முன்னவர் பதவியும் பறிக்கப்பட்டதால் செங்கோட்டையன் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

நாளை மறுநாள் சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜுவிடமிருந்து சட்டமன்ற அலுவல் ஆய்வுக் குழு உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டு, பன்னீர்செல்வத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சட்டமன்றம் எப்பொழுது கூட வேண்டும், எத்தனை நாட்கள் நடைபெற வேண்டும், அவையில் என்னென்ன விவாதங்கள் நடைபெற வேண்டும் என்பதைச் சட்டமன்ற ஆய்வுக் குழு கூடித்தான் தீர்மானிக்கும்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018