மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பெண்களுக்குத் தொழில் தொடங்க நிதி!

பெண்களுக்குத் தொழில் தொடங்க நிதி!

கிராமப்புற கூட்டுறவு வங்கிகள் ரூ.100 கோடி நிதியைப் பெண்களுக்கு தொழில் தொடங்குவதற்குக் கடன் வழங்க முடிவெடுத்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தின் சதாரா மாவட்டத்தில் உள்ள மஹிலா சஹாகரி வங்கி பெண்களுக்கு சொந்தத் தொழில் தொடங்க மாற்று முதலீட்டு நிதி என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி ரூ.100 கோடித் தொகையைப் பெண்களுக்குக் கடனாக வழங்குகிறது. இந்தத் திட்டம் குறித்து வங்கியின் தலைவர் சேத்னா சின்ஹா கூறுகையில், "2020ஆம் ஆண்டுக்குள் 10 லட்சம் பெண்களுக்கு திறன் பயிற்சி மற்றும் தொழில் முதலீடு செய்வதற்கான நிதி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிதியுதவித் திட்டத்தில், முதலீட்டுத் துறை வல்லுநர்கள், சர்வதேச நிதியுதவி அமைப்புகள், தொழில்துறை அமைப்புகள் இணைந்துள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம் பெண்கள் குறைந்த வட்டி விகிதத்தில் தொழில் தொடங்கக் கடன் பெறலாம். பெண்களின் சமூக மேம்பாட்டை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது" என்றார்.

மஹிலா சஹாகரி வங்கிக்கு நாடு முழுவதும் 7 கிளைகள் உள்ளன. இந்த வங்கி ஏற்கனவே 4 லட்சம் பெண்களுக்கு தொழில் முனைவோராகக் கடனுதவி அளித்துள்ளது. இந்த வங்கியில் கடன் வாங்கிய பெண்கள் பலர் பால் உற்பத்தி, கால்நடை வளர்ப்பு, காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை, தேநீர் மற்றும் தின்பண்டங்கள் விற்பனை, ஊறுகாய் மற்றும் அப்பளம் தயாரிப்பு, சைக்கிள்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுதுபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 6 ஜன 2018