கூடுதல் கட்டண வருவாய் வசூலில் ரயில்வே!

பிளெக்ஸி கட்டணம் எனப்படும் கூடுதல் கட்டண வசூல் முறையில் இதுவரையில் ரூ.671 கோடி வசூலித்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் இந்த பிளெக்ஸி கட்டண முறை ரயில்வே துறையால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்படி, துரந்தோ சதாப்தி, ராஜ்தானி உள்ளிட்ட ரயில்களில் முதல் 10 சதவிகித இருக்கைகள் நிரப்பப்பட்ட பிறகு ஒவ்வொரு 10 சதவிகித இருக்கைகளுக்கும் 10 சதவிகிதக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். கடைசியாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் 50 சதவிகிதக் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த பிளெக்ஸி திட்டத்தின் கீழ் 2016 செப்டம்பர் முதல் 2017 நவம்பர் வரையில் ரூ.671 கோடியை ரயில்வே துறை வசூலித்துள்ளதாக மத்திய ரயில்வே துறை இணையமைச்சரான ராஜென் கோஹைன் தெரிவித்துள்ளார்.