மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பறவை காய்ச்சல் : வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு!

பறவை காய்ச்சல் : வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு!

கர்நாடக மாநிலத்தில் பறவை காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழக எல்லைகளில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் வாகனங்களுக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலம், வடக்கு பெங்களூரு பகுதியில் சமீபத்தில் நாட்டுக்கோழி ஒன்று உயிரிழந்தது. அதைத்தொடர்ந்து, ஏராளமான கோழிகள் ஒன்றன் பின் ஒன்றாக இறந்தன. இதன் காரணமாக கோழிகளை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் பாதிப்பால் இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து பெங்களூரு மாநகராட்சிக்கு போபால் ஆய்வகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. பின்னர் தாசரஹள்ளி, எலஹங்கா ஆகிய பகுதிகளில் உள்ள 40 க்கும் மேற்பட்ட கோழிக்கடைகள் சீல் வைக்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து தமிழக கால்நடை பராமரிப்பு துறையினர் கர்நாடகாவில் இருந்து கோழி, முட்டை, தீவனங்கள் ஏற்றி வரும் வாகனங்கள் தமிழக எல்லைக்குள் நுழையத் தடை விதித்துள்ளனர்.

மேலும் இம்மாநிலத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள், ஊழியர்கள் சுழற்சி முறையில் சோதனை சாவடியில் முகாமிட்டு கர்நாடகாவில் இருந்து வரும் வாகனங்களின் டயர்களுக்கு மருந்து அடித்த பின்னர் தான் நீலகிரிக்குள் அனுமதிக்கிறார்கள்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018