இந்தியாவில் வெளியாகுமா நோக்கியா 7?

உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்த நோக்கியா சமீபத்தில் நோக்கியா 7 என்ற மாடலை சீனாவில் வெளியிட்டது.
நோக்கியா நிறுவனத்தின் புதிய ஆன்ட்ராய்டு மாடல்கள் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் நோக்கியா 7 என்ற புதிய மாடலை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. 4GB RAM, 64GB இன்டெர்னல் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மாடலின் எதிர்பார்ப்பு ஐரோப்பிய நாடுகளில் அதிகம் இருப்பதால், வருகிற 10ஆம் தேதி இந்த மாடலை அங்கு அதிகாரப்பூர்வமாக வெளியிட நோக்கியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பின்புறம் 16 MP மற்றும் செல்ஃபி கேமரா 5MP கொண்டு இந்த புதிய மாடல் வெளியாகிறது. 5.2 இன்ச் திரையளவு கொண்டுள்ள நோக்கியா 7, 3000 mAH பேட்டரி சக்தி கொண்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் வசதியுடன் வெளியாக உள்ள மாடலை இந்தியாவில் வெளியிடுவது குறித்த தகவலை நோக்கியா நிறுவனம் வெளியிடவில்லை.