முதல்வருடன் பேசிய ஸ்டாலின்

போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று (ஜனவரி 6) மூன்றாவது நாளாக தொடர்ந்துகொண்டிருக்கிறது.
அமைச்சர் வேண்டுகோள், நீதிமன்ற ஆணை ஆகியவற்றைக் கடந்தும் போக்குவரத்து ஊழியர்கள் இன்றும் தங்கள் வேலை நிறுத்தத்தை தொடர்கின்றனர். இந்நிலையில் இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியோடு இன்று தொலைபேசியில் பேசியிருக்கிறார்.
‘போக்குவரத்து தொழிலாளர் வேலை நிறுத்தத்தால் மக்கள் பெரிதும் பாதிப்பு அடைந்துள்ளனர். அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது?’ என்று முதல்வரை கேள்வி கேட்ட ஸ்டாலின் திமுக சார்பாக இதுபற்றிய ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.