மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ரஜினி மன்றம்: பெயர் மாற்றம்!

ரஜினி மன்றம்: பெயர் மாற்றம்!

அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம், "ரஜினிகாந்த் மக்கள் மன்றம்"என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தான் அரசியலுக்கு வருவது உறுதி, வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவேன் என்று நடிகர் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். இதையடுத்து தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்புத் தொற்றிக் கொண்டது. அரசியலுக்கு வருவதற்கான பணிகளைத் தொடங்கிய நடிகர் ரஜினிகாந்த், ரஜினி மன்றம் என்ற பெயரில் செயலியும், இணையதளப் பக்கத்தையும் அறிமுகப்படுத்தினார். மன்றத்தின் லோகோவில் முதலில் தாமரை இடம்பெற்ற நிலையில், பல்வேறு தரப்பிலிருந்தும் வைக்கப்பட்ட விமர்சனம் காரணமாக அது நீக்கப்பட்டது. மேலும் லோகவில் பாபா முத்திரையுடன் சுழலும் நாகப்பாம்பும் இடம் பெற்றது.

ரஜினிக்கு அரசியல் வருகைக்கு ஆதரவாகவும், விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அரசியலுக்கு வருவதை முன்னிட்டு திமுக தலைவர் மு.கருணாநிதி, எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், ராமகிருஷ்ணா மடத்தின் தலைவர் கவுதமானந்தா உள்ளிட்டோரைச் சந்தித்து ரஜினிகாந்த் ஆசியும் பெற்றுள்ளார். ரஜினியின் கட்சிப் பெயர் பொங்கலுக்குள் அறிவிக்கப்படும் என்று அவரது சகோதரர் ஏற்கனவே சூசகமாகத் தெரிவித்திருந்தார் .

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018