மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஒருநாள் போட்டியா, டெஸ்ட் போட்டியா?

ஒருநாள் போட்டியா, டெஸ்ட் போட்டியா?

தென்னாப்பிரிக்கா விளையாடிய இன்னிங்ஸின் 50.2 ஓவர் வரை நேற்றைய செய்தியில் தெரிவித்திருந்தோம். இரண்டாவது டீ பிரேக் முடிந்த பிறகு ஆட்டத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்க அணிக்கு மைதானம் நன்கு ஒத்துழைத்தது. பவுலர் என்பவர் பவுலிங் மட்டுமில்லாமல், அவ்வப்போது பேட்டிங் பயிற்சியும் செய்யவேண்டும் என்பதை தென்னாப்பிரிக்க அணி கண்டிப்பாகக் கடைப்பிடிக்கிறது என்பது அவர்களது பவுலர்கள் அடித்த ரன்களிலிருந்து தெரிந்தது. கேசவ் மஹராஜ் (35), கேசிகோ ரபடா (26), டேல் ஸ்டெய்ன் (16) ஆகியோர் அடித்த ரன்களினால் 286 ரன்கள் எடுத்த தென்னாப்பிரிக்க அணி 73.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

286 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் பந்திலேயே முரளி விஜய் அடித்த ஒரு ரன் நம்பிக்கையை அளித்தது. அவசரமே இல்லாமல் மீதமிருக்கும் ஓவர்களை விளையாடிவிட்டு வந்தால் நாளை பார்த்துக்கொள்ளலாம் என்பது தான் இந்திய அணியின் வியூகமாக இருந்தது. அடுத்த 15 பந்துகளையும் ரன் எடுக்காமல் கடத்திய முரளி விஜய்யை பாராட்டி ஃபேஸ்புக், ட்விட்டரில் போஸ்டுகள் களமிறங்கிக்கொண்டிருந்த சமயம், வெர்னன் பிலாந்தர் வீசிய பந்தில் எல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவுட் ஆனது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆஃப் ஸ்டெம்புக்கு மிகவும் வெளியில் சென்ற பந்தைத் தேடிச்சென்று எல்கரிடம் கேட்ச் கொடுத்தது எதற்கு என்பதுதான் இங்கு முக்கியம்.

விஜய் கிளம்பிய பின் நான்கு பந்துகள் வீசப்பட்ட நிலையில் ஷிகர் தவன் பந்து வீசிய ஸ்டெயினிடமே கேட்ச் கொடுத்துவிட்டு அவுட் ஆகிவிட்டார். இவர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியில் போன அந்தை ஆடவில்லை. ஸ்டெய்ன் வீசிய எகிறு பந்தை புல் ஷாட் அடிக்க முயன்று ஆட்டமிழந்தார். ஆட்டத்தின் தொடக்கக் கட்டத்தில் அப்படி ஒரு ஷாட்டை அடிக்க வேண்டிய அவசியம் என்ன என்னும் கேள்வியை அவரிடம் கேட்க வேண்டும்.

பிறகு களமிறங்கியவர் விராட் கோலி. அவரும் விரைவிலேயே தன் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்த விக்கெட்டில் பாராட்டப்பட வேண்டியவர்கள் மோர்னி மோர்க்கலும் கேப்டன் டூப்ளசிஸும்.

முதல் நான்கு ஓவர்களை பிலேந்தர், ஸ்டெயின் ஆகியோர் வீசியதும், ஒன்பதாவது ஓவரை மோர்க்கலை அழைத்து வீசச்சொன்னார் கேப்டன். எடுத்த எடுப்பிலேயே தெளிவான ஒரு பந்தை வீசி விராட் கோலியின் விக்கெட்டை எடுத்தது மிகப்பெரிய நிம்மதி தென்னாப்பிரிக்க அணிக்கு.

நான்கு ஸ்லிப்களை வைத்துக்கொண்டு ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே கிட்டத்தட்ட முழு அளவில் வீசப்பட்ட அந்தப் பந்தை விட்டுவிடுவோம் என்று கோலிக்குத் தோன்றவில்லை. அடஹை ட்ரவி ஆடப்போனார். பந்து மட்டையின் விளிம்பில் பட்டு ஸ்லிப் தடுப்பாளரின் கைகளுக்குள் நேராகச் சென்றது.

நேற்றைய செய்தியில் குறிப்பிட்ட 7 விக்கெட்டுகள் வரை ரவிச்சந்திர அஸ்வின் எந்த விக்கெட்டையும் எடுக்கவில்லை. கடைசியாக எடுக்கப்பட்ட மூன்று விக்கெட்டுக்கும் அவர்தான் காரணம். இரண்டு விக்கெட்டுகளை அவரே பந்து வீசி வீழ்த்தினார். கேசவ் மஹராஜ் விக்கெட்டை மட்டும் பந்தை எறிந்து வீழ்த்தினார். டெஸ்ட் மேட்சில் ரன் அவுட் புதிதல்ல. ஆனால்,

நேற்றைய சூழலில் அந்த ரன் தேவையில்லாதது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018