மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கோலாகலமாகத் தொடங்கிய நட்சத்திரக் கலை விழா!

கோலாகலமாகத் தொடங்கிய நட்சத்திரக் கலை விழா!

நடிகர் சங்க கட்டிடத்துக்கு நிதி திரட்டுவதற்காக மலேசியாவில் இன்று (ஜனவரி 6) நட்சத்திரக் கலை விழா நடைபெற்று வருகிறது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இதில் கலந்துகொள்கிறார்கள்.

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக திரைத்துறையினர் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டி உள்ளிட்டவைகளை நடத்த நடிகர் சங்கம் திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று மலேசியாவில் உள்ள புக்கிஜாலி ஸ்டேடியத்தில் நடக்கும் நட்சத்திரக் கலை விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட தமிழ் திரையுலக நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.

காலை 10 மணிக்குத் தொடங்கிய கலை நிகழ்ச்சிகள், இரவு 10 மணி வரையிலும் பல்வேறு பிரிவுகளில் நடக்கின்றன. நடிகை காஜல் அகர்வால் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நடன நிகழ்ச்சிகள், காமெடி நிகழ்ச்சிகள், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளும் நட்சத்திர கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டி ஆகியவை இதில் இடம்பெறும்.

முன்னதாக நேற்று (ஜனவரி 5) கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நட்சத்திர விளையாட்டு வீரர்களின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. நடிகை ஷோபனா குழுவினரின் நாட்டியத்துடன் நிகழ்ச்சி ஆரம்பமானது.

​தொடர்ந்து கிரிக்கெட் அணி வீரர்களின் அறிமுக நிகழ்ச்சியும், ஜெயம் ரவி - ஆர்யாவின் கால்பந்து அணியினரின் அறிமுக நிகழ்ச்சியும் நடந்தது. கோவை கிங்ஸ் அணிக்கு கார்த்தி கேப்டனாக உள்ளார். இவரது அணியில் நந்தா, விஷ்ணு, அஸ்வின், பசுபதி, கலையரசன், உதயா மற்றும் பிளாக் பாண்டி இடம்பெற்றுள்ளனர். சேலம் சீட்டாஸ் அணிக்கு ஜீவா கேப்டன். இவரது அணியில் பிருத்வி, தினேஷ் மாஸ்டர், சரண், வசந்த் விஜய், நட்டி, செளந்தர்ராஜன் ஆகியோர் உள்ளனர். மதுரை காளைஸ் அணிக்கு விஷால் கேப்டன். இவரது அணியில், ரமணா, அசோக் செல்வன், ரிஷி, ஆர்கே.சுரேஷ், அஜய், சாகி மற்றும் செந்தில் ஆகியோர் உள்ளனர்.

ராம்நாடு ரைனோஸ் அணிக்கு விஜய் சேதுபதி கேப்டன். இவரது அணியில் ஜிவி பிரகாஷ், ஷாம், பரத், ஆதவ் கண்ணதாசன், போஸ் வெங்கட், வருண், நாகேந்திர பிரசாத், அஸ்வின், கவுதம் கார்த்திக் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். திருச்சி டைகர் அணிக்கு சிவகார்த்திகேயன் கேப்டன். இவரது அணியில் விக்ரம் பிரபு, சூரி, சதீஷ், அருண்ராஜா, சாந்தனு, பிரேம், ஹேமச்சந்திரன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். சென்னை சிங்கம் அணிக்கு சூர்யா கேப்டன். இவரது அணியில், அருண் குமார், விக்ராந்த் , மிர்ச்சி சிவா, உதய், ஹரீஷ், அருண் பாலாஜி, சஞ்சய் பாரதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

​தொடர்ந்து மலேசிய உள்ளூர் கலைஞர்களின் கலைநிகழ்ச்சி மற்றும் பேஷன் ஷோ நடைபெற்றது. விழாவின் நிறைவாக நடிகர் ரஜினியும், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணனும் விளையாட்டு போட்டிகளுக்கான கோப்பையை அறிமுகம் செய்து வைத்தனர். நிகழ்ச்சியை வெங்கட் பிரபு, பிரேம்ஜி அமரன், நடிகைகள் சங்கீதா, ரோகினி, சுஹாசினி, நடிகர் சுரேஷ் ஆகியோர் தொகுத்து வழங்கினர்.

நட்சத்திர கலைவிழாவில் விஜய், அஜித் இருவரும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. கலை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக மலேசியா சென்றுள்ள ரஜினிகாந்த், நேற்று அந்நாட்டின் பிரதமர் முகமது நஜிப் ரசாக்கை சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மலேசிய பிரதமர், “மீண்டும் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். மலேசியாவில் உங்கள் நேரத்தை சிறப்பாக செலவிடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 6 ஜன 2018