மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கமல் மாடியிலிருந்து பார்ப்பவர்!

கமல் மாடியிலிருந்து பார்ப்பவர்!

நடிகர் கமல்ஹாசன் மாடியிலிருந்து பார்ப்பவர், நாங்கள் குடிசைக்குள் இருந்து மக்களின் கஷ்டங்களை புரிந்து செயல்படுகிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்ந்து வரும் நிலையில், நேற்று நடிகர் கமல்ஹாசன், "தமிழக முதலமைச்சர், மக்கள் அனுபவிக்கும் இன்னல்களையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளையும் மனதில் கொண்டு, தயவாய் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும். பொங்கலுக்கு அதுவே அரசுதரும் விலைமதிப்பிலா பரிசாகும்" என்று போக்குவரத்து ஊழியர்களுக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னையில் இன்று (ஜனவரி 6) செய்தியாளர்களிடம் பேசிய மீனவளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரி நடிகர் கமல்ஹாசன் பொங்கல் பரிசுத் தொகுப்புத் திட்டத்தினை மறைமுகமாகச் சாடியுள்ளாரே என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தை நேற்று முதல்வர் துவக்கி வைத்தார். வேட்டி, சேலை வழங்கும் திட்டம் மூலம் நெசவாளர்கள் பயன்பெறுகின்றனர். அதிமுக அரசு சமூக நீதிக்கானது, அரசுக்கு பல்வேறு நிதிநெருக்கடிகள் இருந்தபோதும் கூட பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர், தாழ்த்தப்பட்டோர் மீனவர்கள், நெசவாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் பயன்பெறக் கூடிய வகையில் பொங்கல் பரிசு உள்ளிட்ட ஏனைய திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

அடித்தட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் அவர்களின் கஷ்டங்களை உணர்ந்துள்ள காரணத்தால் இவைகள் வழங்கப்படுகின்றன. இப்படி வேறந்த மாநிலத்திலும் வழங்கப்படுவது இல்லை. நடிகர் கமல்ஹாசனை நாங்கள் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அடித்தட்டு மக்களுக்கு ஆதரவாக இருக்கும் இவ்வகை திட்டங்களை கைவிட வேண்டும் என்று நினைக்கிறாரா?" என்று கேள்வி எழுப்பினார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 6 ஜன 2018