மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வேஷ்டியின் கம்பீரம்!

வேஷ்டியின் கம்பீரம்!

மற்ற நாடுகளிலிருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுவதும் நமது பெருமையுமானது தமிழர்களின் உணவு, உடை,கலாச்சாரம். இந்தியா மட்டுமின்றி இலங்கை, வங்காள தேசம் மற்றும் மாலத்தீவுகளிலும் வேஷ்டி அணிவது உண்டு. தமிழர்கள் முக்கிய விழாக்களின்போது, பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இத்தகைய பாரம்பரிய உடையான வேஷ்டியை அணிவதில் இன்றைய இளைஞர்கள் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதால், அதை ஊக்குவிக்கும் வகையில் யுனெஸ்கோ நிறுவனத்தால் ஆண்டுதோறும் ஜனவரி 6ஆம் தேதி சர்வதேச வேஷ்டி தினம் கொண்டாடப்படுகிறது. கிராமத்தில் எப்போதுமே வேஷ்டி அணிந்துகொண்டிருக்கும் ஆண்கள், தற்போது மேற்கத்திய உடை கலாச்சாரத்தால் இழுக்கப்பட்டு, விழாக் காலங்களில் மட்டும் வேஷ்டி அணிந்திருந்தனர். அதுவும் தேய்பிறை போன்று கொஞ்ச கொஞ்சமாக மறைந்து வருகிறது. கி.பி. 3ஆம் நூற்றாண்டுக்குப்பின் வேஷ்டியணிதல் வழக்கத்திற்கு வந்துவிட்டது. நம் முன்னோர்கள் மரியாதையாகவும், கம்பீரமாகவும் நினைத்த வேஷ்டியை நாம் வேண்டாம் என்று ஒதுக்கிவருகிறோம். நாம் மறந்து போன தமிழரின் வேஷ்டி பற்றி காண்போம்.

வேஷ்டி வகைகள்

வேஷ்டிகள், நான்கு முழம், எட்டு முழம் ஆகிய அளவுகளில் உள்ளன. வேஷ்டிகளில் பல வகைகள் உள்ளன. மல்வேஷ்டி, டயமன்ட் கரை வேஷ்டி, மாறுகரை வேஷ்டி என்பவற்றுடன் பல்வேறு நிறங்கள் கொண்ட கரை வேஷ்டி, சிவப்புக் கரை வேஷ்டி, மெல்லிய சரிகைக் கரை வேஷ்டி, அகல சரிகைக் கரை வேஷ்டி, காவி வேஷ்டி, மஞ்சள் நிற வேஷ்டி எனப் பல்வேறு வகைகளிலும் தராதரங்களிலும் வேஷ்டிகள் உள்ளன.

வேஷ்டி அணிவதின் நன்மைகள்

வேஷ்டி அணிவதால் பல நன்மைகள் இருக்கின்றன. வெப்ப காலங்களில் வேஷ்டி அருமையான உடை. வேஷ்டி அணிவது காற்றோட்டமாகவும், உடலுக்கு உகந்ததாகவும் இருக்கும். வேஷ்டி அணிவதன் மூலம் நெசவாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் .

எதிர்ப்புகள்:

2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஹரிபரந்தாமன் வேஷ்டி அணிந்து கிரிக்கெட் கிளப்புக்குள் சென்றபோது, அவரை கிளப் நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை. கிளப்பின் உடைக் கட்டுப்பாடே இதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தமிழர் உடையை அணிந்துவருவதை ஒரு அமைப்பு எப்படித் தடைசெய்யலாம் என இதற்குத் தமிழகமெங்கும் கடும் எதிர்ப்பும் கண்டனங்களும் கிளம்பின. தமிழகத்தில் ஹோட்டல்கள், கிளப்கள் அனைத்தும் வேஷ்டி கட்டி வருபவர்களை அனுமதிக்காவிட்டால் கிளப் அனுமதி ரத்து செய்யப்படும் என தமிழக அரசு சட்டம் இயற்றியது.

வெளிநாட்டினரைக் கவரும் வேஷ்டி

நியூசிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 13 பெண்கள் உள்பட 32 வெளிநாட்டினர், தமிழகத்தைச் சுற்றி பார்க்கச் சென்னை வந்தனர். அனைத்துச் சுற்றுலா தலங்களையும் சுற்றி பார்த்துவிட்டு, தூத்துக்குடி அருகேயுள்ள சாயர்புரத்துக்குச் சென்று, அங்குள்ள தோட்டம் ஒன்றில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அவர்கள், சேலையும், வேஷ்டியும் அணிந்து பொங்கல் வைத்தனர்.

மங்கிக்கொண்டிருக்கும் தமிழரின் அடையாளத்தை மீட்பது தமிழரின் கடமை என்பதை இன்றைய நாளில் நினைவுபடுத்திக்கொள்வோம்

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018