மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கல்வீச்சு தாக்குதல்: ஹெல்மெட் அணிந்த ஓட்டுநர்!

கல்வீச்சு தாக்குதல்: ஹெல்மெட் அணிந்த ஓட்டுநர்!

கோவையிலிருந்து இன்று காலை கோபி வந்த அரசு பேருந்து ஒன்றின் ஓட்டுநர், கல்வீச்சு காரணமாக ஹெல்மெட் அணித்து பேருந்தை ஓட்டி வந்தார்.

தமிழகத்தில் நேற்று முன்தினம் போக்குவரத்து ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி, அமைச்சர் விஜய பாஸ்கரிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனையடுத்து, நேற்று முன்தினம் (ஜனவரி 4) முதல் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 85 சதவிகிதம் பஸ்கள் இயங்காததால் போக்குவரத்து அடியோடு முடங்கியது. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் எனக் கடுமையாக எச்சரித்தது. இருப்பினும் அதனைச் சட்டப்படி சந்திப்போம் என்று கூறித் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று (ஜனவரி 6) போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைக் கொண்டு ஒருசில பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே போராட்டங்களும், கல்வீச்சுகளும் நடைபெறுகின்றன.

மதுரையில் இன்று எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற அரசு பேருந்தின் மீது மர்ம நபர்கள் திடீரென கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் பேருந்தின் கண்ணாடி முழுதும் சேதமடைந்ததுடன், ஓட்டுநருக்கும் கையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து ஓட்டுநர் குடியரசு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று காலை 8.45 மணிக்கு கோவையிலிருந்து கோபி வந்த அரசுப் பேருந்து ஓட்டுநர் எஸ்.எஸ்.சிவக்குமார் முன்னெச்சரிக்கையாக, ஹெல்மெட் அணித்து பேருந்தை ஓட்டி வந்தார்.

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அவர், நேற்று முதல் கோவைக்கு பஸ் இயக்கிவருகிறார். எதற்காக ஹெல்மெட் அணிந்தபடி பஸ் இயக்கினீர்கள் என்று சிவக்குமாரிடம் கேட்டபோது, "அரசு போக்குவரத்து கழக ஊழியர்களின் போராட்டத்துக்கு நடுவே நான் பஸ்ஸை இயக்கிவருகிறேன். எனவே என்னை யாரும் தாக்கிவிடக் கூடாது என்பதற்காகவே நான் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்ஸை ஓட்டி வந்தேன். நான் ஹெல்மெட் அணிந்து வந்ததை மக்கள் வித்தியாசமாகப் பார்த்தனர். கோவை பஸ் நிலையம், கருமத்தம்பட்டி அருகே உள்ள சுங்கச்சாவடி ஆகிய இடங்களில் மக்கள் என்னை செல்போனில் படம் பிடித்தனர்" என்று கூறினார்.

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

4 நிமிட வாசிப்பு

டாஸ்மாக் கடைகளின் முன்பு விலைப்பட்டியல்!

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

5 நிமிட வாசிப்பு

தமிழகத்தின் ஓலா தொழிற்சாலையில் 10,000 பெண் ஊழியர்கள்!

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் ...

3 நிமிட வாசிப்பு

சென்னை கோடம்பாக்கம் - ஆற்காடு சாலை: இன்று முதல் ஓராண்டுக்குப் போக்குவரத்து மாற்றம்!

சனி 6 ஜன 2018