மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வாக்கு வங்கி அரசியலே காங்கிரஸின் கொள்கை!

வாக்கு வங்கி அரசியலே காங்கிரஸின் கொள்கை!

முத்தலாக் தடை மசோதா மாநிலங்களவையில் விவாதிக்கப்படாமல் போனதற்கு, காங்கிரஸின் வாக்கு வங்கி அரசியலே காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத்.

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்றுடன் (ஜனவரி 5) முடிவடைந்தது. இந்த கூட்டத் தொடரில் முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றிவிட வேண்டுமென்று மத்திய பாஜக அரசு முனைப்பு காட்டியது. கடந்த வாரம் மக்களவையில் வெற்றிகரமாக இந்த மசோதா நிறைவேறியது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.

இதற்கு காங்கிரஸ் கட்சியினரின் வாக்கு வங்கி அரசியலே காரணம் என்று கூறியிருக்கிறார் மத்திய சட்ட அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத். மக்களவையில் காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துவிட்டு, மாநிலங்களவையில் எதிர்ப்பு காட்டியது பற்றியும் தனது பேச்சில் குறிப்பிட்டிருக்கிறார். “1986இல் ஷா பானோ விவகாரம் முதல் 2017இல் சயாரா பானோ வரை, காங்கிரஸின் செயல்பாடு ஒரே மாதிரியாகத்தான் உள்ளது. நாங்கள் ஆலோசனைகளைக் கேட்கத் தயாராக உள்ளோம்; நாடாளுமன்றத்தில் விவாதம் நடக்க வேண்டுமென்பதிலும் உறுதியாக இருக்கிறோம். காங்கிரஸின் நடத்தை என்னவென்பது இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார்.

மாநிலங்களவைத் தேர்வுக் குழுவுக்கு முத்தலாக் தடை மசோதாவை அனுப்ப வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை பற்றிய கேள்விக்கு, அப்படிச் செய்தால் மசோதா வீரியமற்றதாகிவிடும் என்று பதில் தெரிவித்திருக்கிறார் ரவிஷங்கர். “முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யப்படுவது குற்றமில்லை என்றாக்க முயற்சிக்கிறது காங்கிரஸ். நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தபோதிலும் இந்தப் பழக்கம் தொடர்ந்து வருகிறது. இந்தக் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதைத் தடுக்க நாம் சிறப்பு வழிகளைக் கண்டறிந்தாக வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

6 நிமிட வாசிப்பு

மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம ...

3 நிமிட வாசிப்பு

100 நாள் அட்டைக்கு லஞ்சம்: யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்!

சனி 6 ஜன 2018