மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஆப்பிளை மிஞ்சிய புதிய நிறுவனம்!

ஆப்பிளை மிஞ்சிய புதிய நிறுவனம்!

இன்ஸ்பேரோ என்ற புதிய நிறுவனத்தில் வயர்லெஸ் ஸ்மார்ட்ஹெட்போன் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பேட்ஸ்யை விட அதிக வசதிகளை கொண்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் பாதுகாப்பு என்ற ஒன்றினை அடிப்படையாக வைத்து செயல்பட்டு வருகிறது. ஆனால் பிற வசதிகளை கருத்தில் கொள்ளும் பயனர்களுக்கு ஆப்பிள் நிறுவனத்தை விட பல்வேறு தேர்வுகள் உள்ளன. அதன்படி சமீபத்தில் வெளியான ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பேட்ஸ் என்ற ஹெட்போன்களுக்கு போட்டியாக தற்போது புதிய வின்ஸி என்ற புதிய ஹெட்போன் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை வெளியான அனைத்து வயர்லெஸ் ஸ்மார்ட்ஹெட்போன்களும் மொபைல் போன் அருகில் இருந்தால் மட்டுமே செயல்படும் வகையில் உள்ளன. ஆனால் இந்த புதிய வின்ஸி 2.0 ஹெட்போன் ஸ்மார்ட்போன்கள் அருகில் இல்லாமல், நெட்வொர்க் வசதி மூலம் பயன்படுத்தும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெட்போன் ஆனது பாடல்கள் கேட்பதற்காகவும், உடல் ஆரோக்கியம் குறித்த தகவல்களை பதிவிட்டு வைப்பதற்கும், வாய்ஸ் கமென்ட் மூலம் செயல்படுத்தவும் உதவுகிறது.

கூகுள் நிறுவனத்தின் alexa என்ற தொழில்நுட்பமும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் பல்வேறு தகவல்களை இணையத்தில் இருந்து பயனர்கள் பெற்றுக்கொள்ள முடியும். அதுமட்டுமின்றி பயனர்கள் அவர்களின் அட்டவணைகளை இதில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

ஆப்பிள் நிறுவனத்தில் ஏர்பேட்டுடன் ஒப்பிடும் பொழுது அதனை விட விலை குறைந்த இந்த ஸ்மார்ட்ஹெட்போன் அதிக வசதிகளை உள்ளடக்கி உள்ளது.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018