மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஆதார் மூலம் போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு!

ஆதார் மூலம் போலி ஆசிரியர்கள் கண்டுபிடிப்பு!

1,30,000 பேராசிரியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவது ஆதார் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்துக் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களும் தங்களது ஆதார் எண்ணைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பதிவு செய்யப்பட்ட ஆதார் விவரங்களின் அடிப்படையில் உயர்கல்வித்துறை அகில இந்திய அளவில் சர்வே செய்து 2016-17ஆம் ஆண்டிற்கான அறிக்கையைத் தாக்கல் செய்தது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1,30,000 பேராசிரியர்கள் பல்வேறு கல்லூரிகளில் முறைகேடு செய்து முழு நேரமாக பணியாற்றியுள்ளனர். ஆதார் கட்டாயமாக்கப்பட்டதையடுத்து, இவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை. அவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018