மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

அவதியுறும் பால் உற்பத்தியாளர்கள்!

அவதியுறும் பால் உற்பத்தியாளர்கள்!

பால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், பால் உற்பத்தியாளர்கள் வருவாய் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளில் கூட்டுறவு பல் உற்பத்தியாளர்கள் சங்கம் பால் கொள்முதல் விலையைக் குறைத்துள்ளது. இதனால் மத்தியப் பிரதேசத்தின் பால் உற்பத்தியாளர்கள், குறிப்பாக மோரேனா மற்றும் பிந்த் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் வருவாய் இழப்புப் பிரச்னையை எதிர்கொண்டுள்ளனர். இதுகுறித்து மொரேனோவில் உள்ள பஸ்டோலி கிராமத்தைச் சேர்ந்த பால் உற்பத்தியாளரான மகாராஜ் சிங், பிசினஸ் லைன் ஊடகத்திடம் கூறுகையில், "இப்போது எனக்கு ஒரு லிட்டர் பாலுக்கு 24 ரூபாய் தான் கிடைக்கிறது. 20 நாளுக்கு முன்பு லிட்டர் ஒன்றுக்கு எனக்கு ரூ.38 வரை கிடைத்தது. இதன் விளைவாக விவசாயிகளுக்கு மாதத்திற்கு ரூ.5000 வரை வருவாய் இழப்பு ஏற்படுகிறது" என்றார். இவர் தினசரி 12 லிட்டர் பால் கொள்முதல் செய்வதாகவும் கூறினார்.

பால் கொள்முதல் விலை குறைக்கப்பட்டது குறித்து குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் சோதி கூறுகையில், "தனியார் பால் உற்பத்தி நிறுவனங்களின் பால் கொள்முதல் அளவு பெருமளவு குறைந்துள்ளது. இதனால் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் பால் கொள்முதல் வழக்கத்தை விட 20 முதல் 30 சதவிகிதம் வரையில் அதிகரித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் கடந்த மாதம் முதல் பால் கொள்முதல் விலை சரிந்துள்ளது" என்றார்.

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

4 நிமிட வாசிப்பு

ஒன்பது பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றம்!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம் உயரும் அகவிலைப்படி!

2 நிமிட வாசிப்பு

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவிகிதம்  உயரும் அகவிலைப்படி!

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: யுபிஎஸ்சி அறிவிப்பு!

சனி 6 ஜன 2018