மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஆயிரம் கோடியை நெருங்கிய காணிக்கை!

ஆயிரம் கோடியை நெருங்கிய காணிக்கை!

2017ஆம் ஆண்டு, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.995.89 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவஸ்தானம் நேற்று (ஜனவரி 5) அறிவித்துள்ளது.

இந்தியாவின் முதல் பணக்கார கடவுளான திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் நகை பணம் உள்ளிட்டவற்றை காணிக்கையாக உண்டியலில் செலுத்துவது வழக்கம்.

2017ஆம் ஆண்டு 2.73 கோடி பக்தர்கள் திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அவர்கள் 995.89 கோடி ரூபாயை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். அவர்களிடம் 10 கோடியே 66 லட்சத்து 72 ஆயிரத்து 730 லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல், 66 கோடியே 6 லட்சத்து 90 ஆயிரத்து 594 பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது. பிரசாதம் மூலமாக மட்டும் 10.66 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது. அதேபோல் 1 கோடியே 22 லட்சத்து 37 ஆயிரத்து 368 பக்தர்கள் மொட்டை அடித்து தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதன் விற்பனை மூலம் 6.39 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ளது.

2016ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8ஆம் தேதி பண மதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து திருப்பதி உண்டியலில் ஏராளமான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் குவிந்தன. இதன்மூலம் கடந்த 2016ஆம் ஆண்டில் 1046.28 கோடி ரூபாய் வசூலாகியது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018