மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

திரைக்கு முன் யுவன்

திரைக்கு முன் யுவன்

திரைக்கு பின் இருந்து கொண்டு தங்களது இசையால் ரசிகர்களை கவரும் பல இசையமைப்பாளர்களில் ஒருவர் தான் யுவன் ஷங்கர் ராஜா. ஒன்றிரண்டு பாடல்களில் மட்டுமே லேசாக முகம் காட்டியுள்ளார். ஜி.வி.பிரகாஷ், தேவி ஸ்ரீ பிரசாத், விஜய் ஆண்டனி என இளம் இசையமைப்பாளர்கள் பலரும் திரையில் தோன்றி தங்களது திறமையை நிரூபிக்க முன்வந்திருப்பது போல் தாமும் அடுத்த கட்டத்திற்கு நகரலாம் என யுவனும் தற்போது முடிவெடுத்துள்ளார்.

மேலே கொடுக்கப்பட்ட உதாரணங்களை மனதில் வைத்து யுவன் ஷங்கர் ராஜா கதாநாயகனாக நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவது நியாயம் தான். ஆனால் யுவன் அதற்கான தொடக்கப் புள்ளியில் அடியெடுத்து வைத்துள்ளார். தனது இசையால் நடிகர்களை மட்டுமல்லாமல் கேட்கும் ரசிகர்களையும் நடனமாட வைக்கும் யுவன் தாமும் நடனமாட வந்துள்ளார். அவரது இசையமைப்பில் தரணிதரன் இயக்கும் படம் ராஜா ரங்குஸ்கி. மெட்ரோ படத்தில் கதாநாயகனாக நடித்த ஷிரிஷ், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர்.

“யுவன் இந்த படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். ஆனால் முழுப்பாடலுக்கும் அல்ல. படக்குழு அதை முதல் புரொமோஷனல் பாடலாக வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்த பாடலை பாடியவரும் யுவனே. தற்போது யுவன் மற்ற படங்களின் பணியில் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருப்பதால் இந்த மாத இறுதியில் அந்த காட்சி படமாக்கப்பட உள்ளது” என படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள் டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018