மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

நாளை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

நாளை மறுநாள் சட்டமன்றக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், நாளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் 8ஆம் தேதி சட்டமன்றக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் ஆரம்பிக்கும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதையடுத்து சட்டமன்றத்தில் விவாதிக்கக் கூடிய விவகாரங்கள் குறித்து ஒவ்வொரு கட்சியிலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் தினகரன் அவையில் பேசும்போது யாரும் கூச்சல், குழப்பம் எழுப்பக் கூடாது உள்ளிட்ட அறிவுரைகளை முதல்வர் வழங்கினார்.

இந்த நிலையில் சட்டமன்றத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து சென்னை சத்திய மூர்த்திபவனில் நாளைப் (ஜனவரி 7) மாலை 6 மணியளவில் எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்திருந்தார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

9 நிமிட வாசிப்பு

இந்தியாவிலிருந்து ஃபோர்டு வெளியேற முக்கிய காரணம் என்ன?

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால ...

3 நிமிட வாசிப்பு

முதுநிலை ஆசிரியர் தேர்வு: முறைகேட்டில் ஈடுபட்டால் ஆயுட்கால தடை!

சனி 6 ஜன 2018