மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

புரொமோஷனைத் தொடங்கிய விஜய் சேதுபதி

புரொமோஷனைத் தொடங்கிய விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வரும் ஜுங்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் சேதுபதியுடன் இயக்குநர் கோகுல் மீண்டும் இணைந்திருக்கும் படம் ஜுங்கா. விஜய் சேதுபதி தாதாவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாயிஷா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக `மேயாத மான்’ பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். பாரீஸில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பை சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இந்த நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை மலேசியாவில் நடைபெற்று வரும் நட்சத்திரக் கலை விழாவில் வெளியிட்டுள்ளனர்.

சித்தார்த் விபின் இசையமைத்து வரும் இதற்கு டட்லி ஒளிப்பதிவு செய்து வருகிறார். விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். ஏற்கனவே, படக்குழுவால் வெளியிடப்பட்ட விஜய்சேதுபதியின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கவனம் பெற்றுவருகிறது. இதன் டைட்டில் டீசரை இன்று மாலை (ஜனவரி 6) வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

3 நிமிட வாசிப்பு

மோசடி மன்னன் சுகேஷ் சிறையில் உண்ணாவிரதம்

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

3 நிமிட வாசிப்பு

உடன்பாடு இல்லையென்றால் வெளியேறலாம் : நெட்பிளிக்ஸ்!

சனி 6 ஜன 2018