மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஸ்டெய்ன், புவனேஸ்வர் சாதனை!

ஸ்டெய்ன், புவனேஸ்வர் சாதனை!

இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நேற்று (ஜனவரி 3) தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் சில புதிய சாதனைகளை இரு அணி வீரர்களும் நிகழ்த்தி உள்ளனர்.

இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் முதல் ஓவரில் தென்னாப்பிரிக்க அணி வீரர் டீன் எல்கரின் விக்கெட்டினை வீழ்த்தினார். இதன் மூலம் 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு வெளியூர் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

1992ஆம் ஆண்டு டர்பனில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கபில் தேவ் முதல் ஓவரில் விக்கெட் வீழ்த்தினார். அதன் பிறகு புவனேஸ்வர் குமார் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளார். அது மட்டுமின்றி அவர் வீசிய முதல் மூன்று ஓவரிலும் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியதால், கடந்த 2001ஆம் ஆண்டிற்குப் பிறகு இவ்வாறு விக்கெட்டினைக் கைப்பற்றும் 3ஆவது வீரர் என்ற பெருமையை பெற்றார்.

இந்திய அணியைப் போலவே தென்னாப்பிரிக்க அணி வீரர்களும் சிறப்பாகப் பந்து வீசி இந்திய அணியின் தொடக்க வீரர்கள் மூவரை ஆட்டமிழக்க செய்துள்ளனர். தொடக்க வீரர் ஷிகர் தவன் விக்கெட்டினை வீழ்த்திய டேல் ஸ்டெய்ன் 86 டெஸ்ட் போட்டிகளில் 418 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வீரர் ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்தார். ஹர்பஜன் 417 விக்கெட்டுகளை 103 டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்தி உள்ளார்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018