மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வேளாண் பொருள் வளர்ச்சிக்கு நீராதாரம்!

வேளாண் பொருள் வளர்ச்சிக்கு நீராதாரம்!

தோட்டக்கலை மற்றும் வேளாண் பொருட்கள் உற்பத்திக்கு நீர்ப்பாசனத் திட்டங்களை சிறப்பாகச் செயல்படுத்த உரிய முயற்சி எடுக்க வேண்டுமென்று சிக்கிம் மாநில வேளாண் துறை அமைச்சரான சோம்நாத் பவுத்யால் தெரிவித்துள்ளார்.

சிக்கிம் மாநிலத்தின் பணப்பயிர் மற்றும் நீர்ப் பாசனத் துறை அமைச்சரான சோம்நாத் பவுத்யால் தலைமையில் நீர்ப் பாசன மேம்பாடு பற்றிய கூட்டம் சிக்கிம் தலைநகரான கேங்டாக்கில் நடைபெற்றது. அக்டோபர் முதல் மார்ச் வரையிலான ராபி பருவத்தில் ஏற்படும் பாசன பற்றாக்குறைகளையும் அதை எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நீர் பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் சோம்நாத் பவுத்யால் பேசுகையில், “காய்கறி மற்றும் பழங்கள் வளர்ப்புக்குத் தேவையான நீராதாரம் போதுமான அளவில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். காய்கறி வளர்ப்பிற்கான நீர்ப் பாசன வசதி தாராளமாக இருக்க வேண்டும். அதற்கான திட்டத்தைத் தனித்துச் செயல்படுவதைவிட ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இதன் மூலம் அதிகமாக உற்பத்தியாகும் காய்கறிகளை வெளியூர் சந்தைகளில் விற்பனையாகாவிட்டாலும் உள்ளூர் தேவையைப் புரிந்து அதைப் பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும். விவசாயிகளின் உள்ளூர் சந்தை வாய்ப்புகளும் அதிகரிக்கும்” என்றார்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018