மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

போராட்டம் தொடரும்: தொழிற்சங்கங்கள்!

போராட்டம் தொடரும்: தொழிற்சங்கங்கள்!

உயர் நீதிமன்ற உத்தரவை மீறியும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று போக்குவரத்துத் தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்று நேற்று முன்தினம் (ஜனவரி 4) மாலை முதல் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலைநிறுத்தத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட மனுவை நேற்று (ஜனவரி 5) விசாரித்த உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள ஓட்டுநர், நடத்துநர்கள் உடனடியாகப் பணிக்கு திரும்பாவிட்டால், பணிநீக்கம் உள்ளிட்ட விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என்றும் சிஐடியூவைச் சேர்ந்த சவுந்தரராஜன், தொமுசவின்போக்குவரத்துத் தொழிற்சங்க மாநிலச் செயலாளர் சண்முகம் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

“ஊழியர்களின் பிரச்னை தீரும்வரை போராட்டம் தொடரும். அரசின் நடவடிக்கைகளுக்குப் பயப்பட மாட்டோம். நீதிமன்றம் உத்தரவிட்ட நோட்டீஸ் எதுவும் வரவில்லை. திங்களன்று நீதிமன்றத்தில் எங்களது வாதத்தை முன்வைத்து சட்டப்படி எதிர்கொள்வோம்.

பத்தாண்டுகளாகத் தொழிலாளர்கள் பணத்தைத் தராமல் அரசு இழுத்தடிக்கிறது. இந்தப் போராட்டத்துக்கு நாங்கள் காரணமல்ல; அரசுதான் காரணம்” என்று கூறினர்.

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

சனி 6 ஜன 2018