மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

பொங்கல் பையில் எடப்பாடி படம்!

பொங்கல் பையில் எடப்பாடி படம்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (ஜனவரி 5) தொடங்கி வைத்தார்.

அடுத்த வாரம் பொங்கல் பண்டிகை வரவுள்ளதை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று கடந்த டிசம்பர் 29ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர்ந்த திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இடம்பெறும் என்றும், இதனால் 1 கோடியே 84 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புத் திட்டத்தைத் தொடங்கி வைக்கும் விதமாக நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஏழு குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு அடங்கிய பைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உணவுத் துறை அமைச்சர் காமராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதற்கு முன்னர் பொங்கல் பைகளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படம் மட்டுமே இருக்கும். கடந்த ஆண்டு பன்னீர்செல்வம் முதல்வராக இருந்தபோதும் பொங்கல் பரிசுப் பைகளில் ஜெயலலிதாவின் படமே இடம்பெற்றிருந்தது.

ஆனால், முதல்வராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு தன்னை அதிகம் முன்னிலைப்படுத்திக் கொள்வதையே விரும்புவதாகவும், அதன்படி தற்போது இடம்பெற்றுள்ள பரிசுத் தொகுப்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்துடன் தன்னுடைய படமும் இடம்பெறச் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018