மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

ஹெல்த் ஹேமா: ஆஹா அன்னாசி!

ஹெல்த் ஹேமா: ஆஹா அன்னாசி!

அன்னாசிப்பழத்தில் உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துகள் உள்ளதோடு வைட்டமின் ஏ, பி, சி சத்துகளும் நிறைந்துள்ளன. இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் தொப்பை குறையும். முகம் பொலிவு பெறும். நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச் சத்துகளைக் கொண்ட அன்னாசிப்பழம் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும், உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல வியாதிகளைக் குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.

அன்னாசிப்பழம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதயநோய் வருவதைத் தடுத்து, இதயத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.

அன்னாசிப்பழத்தில் உள்ள நோய் எதிர்ப்பு அழற்சி தன்மையால், மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள வீக்கம், காயம் போன்றவை குறைந்துவிடும்.

உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள், அன்னாசியை டயட்டில் சேர்த்துவந்தால், அதில் உள்ள அதிகப்படியான பொட்டாசியம் மற்றும் குறைவான சோடியத்தால், ரத்த அழுத்தம் சீராகப் பராமரிக்கப்படும்.

தேகத்தில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த மருந்து. நன்றாக பழுத்த அன்னாசிப்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக்கி வெயிலில் தூசிப்படாமல் உலர்த்தி வற்றல்களாக செய்து வைத்துகொண்டு, தினமும் படுக்கச் செல்வதற்கு அரைமணி நேரத்துக்கு முன், ஒரு டம்ளர் பாலில், ஐந்து அன்னாசி வற்றல்களை ஊறவைத்து, பின் படுக்க செல்லும்போது 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தம் விருத்தியாகும்.

தொப்பையைக் கரைக்கும் சக்தியும் அன்னாசிக்கு உண்டு. ஓர் அன்னாசிப்பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து, அதில் போட்டு நன்றாகக் கிளறி ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

இரவில் அதை அப்படியே வைத்திருந்து, மறுநாள் காலையில் அதைப் பிழிந்து சாறு எடுத்து வெறும் வயிற்றில் சாப்பிடவும். இந்த முறைப்படி பத்து நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், தொப்பை கரைய ஆரம்பிக்கும். அன்னாசி பித்தக் கோளாறுகளையும் விரைந்து குணமாக்குகிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018