தீபிகாவுக்கு ரகசியத் திருமணம்?

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் கபூரை ரகசியத் திருமணம் செய்யவிருப்பதாக பாலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
சமீபத்தில் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ஜோடி கோலி -அனுஷ்கா. இவர்கள் கடந்த டிசம்பர் 11ஆம் தேதி, இத்தாலியின் டஸ்கனி நகரில் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில், தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஜோடி பற்றி பரபரப்புத் தகவல் கிளம்பியுள்ளது. இந்தக் காதல் ஜோடி, புத்தாண்டு கொண்டாட்டத்துக்குக் குடும்பத்தாருடன் மாலத்தீவுகளுக்குச் சென்றுள்ளது. இந்த நிலையில், நேற்று (ஜனவரி 5) தீபிகாவின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இலங்கையைச் சேர்ந்த ரன்வீர் கபூரும், தீபிகாவும் ரகசியமாக மோதிரம் மாற்றிக்கொண்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது குறித்து உறுதியான தகவல் இன்னும் வெளிவரவில்லை.