மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வீழ்ச்சியடைந்த வெங்காய உற்பத்தி!

வீழ்ச்சியடைந்த வெங்காய உற்பத்தி!

இந்தியாவின் வெங்காய உற்பத்தி 4.5 சதவிகிதம் சரிந்துள்ளதாக வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு பருவத்தில் வெங்காய சாகுபடி பரப்பளவு குறைந்ததால் உற்பத்தியும் குறைந்துள்ளது. 2017-18 வேளாண் பருவத்தில் (ஜூலை - ஜூன்) 21.4 மில்லியன் டன் வெங்காயம் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-17ஆம் வேளாண் பருவ ஆண்டில் 22.4 மில்லியன் டன் வெங்காயம் அறுவடை செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறையின் முதல் மதிப்பீட்டின்படி இந்தப் பருவத்தில் 1.19 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1.30 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்தது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் விநியோகத்தில் சரிவு, வெங்காயம் விலை உயர்வு, குறைந்தபட்ச ஏற்றுமதி விலை (எம்.இ.பி.) டன் ஒன்றுக்கு 850 டாலராக மத்திய அரசு நிர்ணயித்தது போன்ற காரணங்களால் வெங்காயச் சந்தை ஜனவரி 20 வரை நலிவுடனேயே இருக்கும் என்று இந்த அறிக்கை வாயிலாகத் தெரிய வருகிறது. வெங்காயத்துடன் ஒப்பிடும்போது தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகள் நன்றாக உற்பத்தியாகியுள்ளன. காய்கறிகளைப் பொறுத்தவரையில் இந்த ஆண்டு 180.68 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 2016-17 வேளாண் பருவத்தில் 178.17 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது.

பழங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பருவத்தில் 94.88 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என்று கருதப்படுகிறது. 2016-17 வேளாண் பருவத்தில் 92.9 மில்லியன் டன் பழங்கள் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது. அதேபோல மசாலாப் பொருள்கள் இந்த வேளாண் பருவத்தில் 8.16 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்படும் என்று கருதப்படுகிறது. 2016-17 வேளாண் பருவத்தில் 8.12 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

சனி 6 ஜன 2018