மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: கோரிகாவுன் பெருமிதத்தின் பின்னணியில்…

சிறப்புக் கட்டுரை: கோரிகாவுன் பெருமிதத்தின் பின்னணியில்…

அ. குமரேசன்

ஒரு திருத்தமும் கூடுதல் தகவலும்

மஹாராஷ்டிரா மாநிலத்தின் கோரிகாவுன் கிராமத்தில் 1818 ஜனவரி 1இல் நடந்த, மூன்றாம் ஆங்கிலோ மராத்தா போரின் இறுதிச் சண்டையில், அன்றைய பேஷ்வா படையை முறியடித்த கிழக்கிந்திய கம்பெனி படையின் மஹர் வீரர்களின் வெற்றியை ஆண்டுதோறும் தலித் மக்கள் நினைவுகூர்ந்து கொண்டாடிவருவது பற்றிய ‘கோரிகாவுனில் அணையா நெருப்பு’ கட்டுரை ‘மின்னம்பலம்’ ஜனவரி 3 பதிப்பில் வெளியாகியுள்ளது. அந்தச் சண்டை தொடர்பாக மேலும் சில முக்கியத் தகவல்கள் உள்ளன.

பிரிட்டிஷ் அரசின் முகமை நிறுவனமான கிழக்கிந்திய கம்பெனி என்று கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது சரியான பொருளைத் தரவில்லை. அது முழுக்க முழுக்க ஒரு வணிக நிறுவனம்தான். படை பலத்தோடும் வந்த நிறுவனம் இந்திய மன்னர்களை வளைத்தும், அடக்கியும் ஒரு பேரரசை நிறுவியது. பிற்காலத்தில்தான் பிரிட்டிஷ் அரசே, இந்திய நிர்வாகத்தைத் தன்வசம் எடுத்துக்கொண்டது.

பிராமண சமூக மன்னராட்சியான பேஷ்வா ஆட்சியின் படைப் பிரிவுகளில் ஆங்காங்கே மஹர் சமூகத்தினரும் இருந்திருக்கிறார்கள். பேஷ்வா மன்னர் முதலாம் பாஜி ராவ் 1740இல் மரணமடைந்ததைத் தொடர்ந்து, நாட்டிலும் படைகளிலும் மஹர் மக்கள் பல அவமதிப்புகளைக் கூடுதலாகச் சந்தித்தார்கள்.

கம்பெனிப் படைகளை விரட்டும் போரில் தங்களைச் சேர்த்துக்கொள்ளக் கோரினார்கள் மஹர் இளைஞர்கள். ஆனால், இரண்டாம் பாஜி ராவ் அவர்களைச் சாதி மமதையோடு அவமானப்படுத்திப் படையில் சேர்க்க மறுத்தார். அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு உணர்வோடும்தான் அவர்கள் கம்பெனியை நாடினார்கள். நிர்வாகம் உடனே அவர்களைப் படையில் எடுத்துக்கொண்டது.

பேஷ்வா படையில் அப்போது சுமார் 28,000 பேர் இருந்தார்கள். 12 அதிகாரிகளுடன் இருந்த கம்பெனியின் படையிலோ, காலாட்படையினர் 834 பேர்தான். அவர்களில் கிட்டத்தட்ட 500 பேர் மஹர்கள். அந்தச் சிறிய படைதான் பேஷ்வாவின் பெரும்படையை வீழ்த்தி, கோரிகாவுன் கிராமத்தை மீட்டது. இப்படிப்பட்ட வரலாறுகள் பிராமணியக் கண்ணோட்டத்துடனும் உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் இதர பிரிவுகளைச் சேர்ந்தோரது பார்வையிலுமே சித்திரிக்கப்பட்டு வந்துள்ளன. 1927 ஜனவரி 1இல் டாக்டர் அம்பேத்கர் கோரிகாவுனுக்குச் சென்று மஹர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய பிறகுதான், அதுவரையில் அடிமைப்பட்டவர்களாக மட்டுமே காணப்பட்டவர்களின் மகத்தான வீரமும் தியாகமும் வெளி உலகத்துக்குத் தெரியவந்தது. இதை நினைவுகூர்ந்து பரப்பிடும் நோக்கத்துடன் 2005இல் பீமா கோரிகாவுன் ரன்ஸ்தம்ப் சேவா சங் (பீகேஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

இருநூறாவது ஆண்டு என்பதையொட்டி இவ்வாண்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எல்கார் பரிஷத் (போர்க்குரல் சங்கமம்) கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதை சில பிராமண அமைப்புகள் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. பேஷ்வா அரண்மனை இருந்த இடத்தில் விழா நடத்தப்படுவதற்குத் தடை கோரினார்கள். குழுமிய மக்கள் மீது தாக்குதல் தொடுத்தார்கள்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

சனி 6 ஜன 2018