மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கழிப்பறை கட்ட கெஞ்சும் முதல்வர்!

கழிப்பறை கட்ட கெஞ்சும் முதல்வர்!

ஆந்திர மாநிலத்தில் மார்ச் 31ஆம் தேதிக்குள் எல்லா வீட்டிலும் கழிப்பறைகள் அமைக்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

தெலுங்கு தேசம் கட்சியின் தலைமையிலான ஆந்திர மாநில அரசின் சார்பில் பல்வேறு பகுதிகளில் ‘ஜென்ம பூமி’ நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் ஜனவரி 4 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, “ஆந்திராவில் மொத்தம் உள்ள 13 மாவட்டங்களில், 6 மாவட்டங்களில் 100 சதவிகிதம் கழிப்பறை வசதிகள் உருவாக்கப்பட்டுவிட்டன. அதேபோல் மீதம் உள்ள 7 மாவட்டங்களிலும் நிறைவேற்றப்பட வேண்டும். ஆந்திரா முழுவதும் தூய்மையாகவும், சுகாதாரமாகவும் மாற்றுவதையே நான் குறிக்கோளாகக் கொண்டுள்ளேன்.

அப்படி இல்லையென்றால், உங்கள் கிராமத்துக்கு வந்து இரவும் பகலும் உங்களுடன் இருந்து கழிப்பறையைக் கட்டிய பிறகுதான் அமராவதி நகருக்குத் திரும்பி செல்வேன். இல்லையேல் வரும் மார்ச் மாதம் 31ஆம் தேதிக்குப் பிறகு அமைதியான வழியில் தர்ணா போராட்டத்தில் குதிப்பேன். ஒருநாள் முழுவதும் உண்ணாவிரதமும் இருப்பேன். அதன்பிறகாவது என்மீது பரிதாபப்பட்டு நீங்கள் கழிப்பறைகளைக் கட்டுவீர்கள் என எதிர்பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார்.

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

2 நிமிட வாசிப்பு

திருப்பதி: அனைத்து பக்தர்களுக்கும் இலவச தரிசன டோக்கன்கள்!

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

6 நிமிட வாசிப்பு

உரியவரிடம் சேர்ந்த ஓணம் பம்பர் பரிசு ரூ.12 கோடி!

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

சனி 6 ஜன 2018