மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சிறப்புக் கட்டுரை: கிரெடிட் கார்டுகளுக்கு குட்பை!

சிறப்புக் கட்டுரை: கிரெடிட் கார்டுகளுக்கு குட்பை!

ரித்திகா சவுகான்

நியூயார்க்கைச் சேர்ந்த தொழிலதிபர் ஃபிரேங் மெக்நமரா 1950ஆம் ஆண்டில் எம்பையர் டினேர் கிளப்பைத் தொடங்கினார். இவர் மிகப்பெரும் கனவுகளுடன் இதைத் தொடங்கினார். இவர்தான் கிரெடிட் கார்டு திட்டத்தைத் தனது தொழிலுக்கு முதன்முதலில் கையிலெடுத்தார். பல வரலாற்றியலாளர்கள் பல்வேறு முறைகளில் தங்களது ஆலோசனைகளைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டை மேம்படுத்தி உருவாக்கினார்கள். இதை மேசபோட்டமியன் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்தனர். இருப்பினும் முதன்முதலில் இத்திட்டத்தை உருவாக்கியவர் ஃபிரேங் மெக்நமரா தான். இது பொதுவான வர்த்தக அட்டையாகத்தான் வடிவமைக்கப்பட்டது. முதல் உலகளாவிய கிரெடிட் கார்டை டிநேர்ஸ் கிளப் 1950ஆம் ஆண்டில் உருவாக்கியது. 1958ஆம் ஆண்டில் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பெனி பயணங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறைக்கு கிரெடிட் கார்டு நடைமுறையைக் கொண்டுவந்தது. இந்த நிறுவனம் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களிடம் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் வசூலித்துக்கொண்டது. பயனாளர்களின் கட்டணத்துக்கேற்ப மாதத்துக்கு 4-5 சதவிகிதம் சேவைக் கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

படிப்படியான வளர்ச்சி

எல்லாவிதமான கிரெடிட் கார்டுகளையும் பேங்க் ஆஃப் அமெரிக்கா அறிமுகப்படுத்தியது. மிகப் புதுமையான பல மாடல்களை இந்த வங்கி அறிமுகப்படுத்தியது. இதனால் இந்த வங்கி பேங்க் ஆஃப் அமெரிக்கார்டு என அழைக்கப்பட்டது. முதலில் இந்தத் திட்டங்கள் கலிஃபோர்னியாவில் மட்டும்தான் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் பயணிகள் மற்றும் பொழுதுபோக்குத் துறையினர் மட்டுமின்றி அனைத்துத் துறையினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. 1966ஆம் ஆண்டில் பேங்க் ஆஃப் அமெரிக்கார்டு நாடு முழுவதுமான பொது கிரெடிட் கார்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டம் பின்னாளில் விசாவாக மாற்றமடைந்தது. விசா மிகவும் பிரபலமடைந்தது. இதன்பின்னர் பல வங்கிகள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பாகி கலிஃபோர்னியாவில் நாட்டின் பெரிய கிரெடிட் கார்டு திட்டத்தை உருவாக்கின. இந்த வங்கிகள் கூட்டமைப்பாக இணைந்து மாஸ்டர் கார்டு திட்டத்தை கலிஃபோர்னிய மக்களுக்கு அறிமுகப்படுத்தின.

இந்த வழியில் இந்த மூன்று பெரிய கார்ப்பரேட்டுகளும் உலகையே இன்று தங்கள் கட்டுக்குள் வைத்துள்ளன என்பதை நம்ப முடியவில்லை. 2016ஆம் ஆண்டு 1000 பேரிடம் நடத்தப்பட்ட மாதிரி ஆய்வொன்றில், 40 சதவிகிதத்தினர் தங்களுக்கு கிரெடிட் கார்டுதான் பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளனர். கிரெடிட் கார்டுகள் உலகின் எல்லாப் பக்கமும் பரவியுள்ளது. கிரெடிட் கார்டு இருந்தால் கடன் வாங்க வங்கி மேலாளர்களிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. வசதியற்றதாக உணரத் தேவையில்லை. கடன் வாங்கிச் செலுத்திவிட்டால் மீண்டும் மீண்டும் தேவைப்பட்டால் வாங்கிக்கொண்டே இருக்கலாம்.

தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள்!

இது ஒரு வகையான ஆடம்பர வாழ்க்கைக்குள் மக்களைப் பிணைத்துள்ளது. மேலும், நுகர்வோருக்கு உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் எம்.ஐ.டியைச் சேர்ந்த இரண்டு ஆய்வாளர்கள் இதன் விளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இரண்டுவிதமான குழுக்கள் இந்த ஆய்வில் தனித்தனியாக பங்கேற்றனர். இரண்டு குழுவினரும் தங்களது பணம் குறித்துத் தெளிவான தகவல்களை ஆய்வில் கூறவில்லை. இதில் ஒரு குழுவினர் டெபிட் கார்டு பயன்படுத்துவதாகக் கூறுகின்றனர். அதேசமயம் அவர்கள் ஏடிஎம் கார்டுகளையும் பயன்படுத்துகின்றனர். மற்றொரு குழுவினர் கிரெடிட் கார்டை பயன்படுத்துவதாகக் கூறியுள்ளனர். கிரெடிட் கார்டுகள் மனிதர்களிடையே கலாசார மாற்றங்களாக உருவாகியிருக்கின்றன.

கிரெடிட் கார்டுகளே பணத்தின் பயன்பாட்டைக் குறைத்து டிஜிட்டல் பரிவர்த்தனையை முதலில் ஊக்குவித்தது. அதேசமயம் கிரெடிட் கார்டுகளில் ஹேக்கிங் மற்றும் தரவு மீறல்கள் போன்றவை பல நிறுவனங்களில் நிகழ்வதால் வாடிக்கையாளர்களுக்குச் செலவும், சுமையும் கிரெடிட் துறையில் அதிகமாக உள்ளது. தற்போது பரிவர்த்தனைகளுக்குப் பல்வேறு மாற்று வழிகள் வந்துள்ளன. பாதுகாப்பான வழிகளும் வந்துள்ளன. கார்டுகள் இல்லாத பரிவர்த்தனைகளை நோக்கி இன்றைய காலகட்டம் நகர்ந்துகொண்டிருக்கிறது.

அதிகரிக்கும் மாற்று வழிகள்!

டிஜிட்டல் வழியான பி2பி பணப் பரிவர்த்தனை முறை தற்போது அதிகரித்துவருகிறது. பரிவர்த்தனைக் கட்டணங்கள் குறைந்துள்ளன. மற்ற கட்டணங்களும் குறைந்துள்ளது. பரிவர்த்தனைகளின் பாதுகாப்பும் அதிகரித்துள்ளது. பேபெல் போன்றவை உலகம் முழுவதும் மாற்றுப் பரிவர்த்தனைகளை அதிகரிக்கச் செய்துள்ளது. வென்மோ, அப்வொர்க், பிவெர் போன்றவையும் உலகம் முழுவதும் முன்னணி பரிவர்த்தனைத் தளங்களாக விளங்குகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் பேடிஎம் போன்ற தளங்கள் வேகமாக வளர்ந்துள்ளன. ஸ்மார்ட்போன்களின் வரவே கிரெடிட் கார்டுகளைப் பின்னுக்குத்தள்ளி மாற்றுப் பரிவர்த்தனைகளை பெருமளவில் ஊக்குவித்துள்ளது. கிரிப்டோ நாணய பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதை மின்னணு ரொக்கம் என்பார்கள். கிரெடிட் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதன் மூலம் பரிவர்த்தனைக் கட்டணங்கள் அதிகரிப்பதைத் தவிர்க்கலாம். விற்பனை வரி செலுத்தத் தேவையில்லை. கூடுதல் பாதுகாப்பும் கிடைக்கிறது.

முன்னதாக கூறியுள்ளோம், கிரெடிட் கார்டுகள் வெளியேற்றப்பட்டுள்ளன. டிஜிட்டல் மாற்று வழிகளை மக்கள் காண்கின்றனர். குறிப்பாக மந்த்ரா போன்றவையும் சிறந்த உதாரணமாகும். குறைந்த பரிவர்த்தனைக் கட்டணம், அதிக பாதுகாப்பு, அதிகரித்துள்ள சவுகரியம் போன்றவை மக்களை கிரெடிட் கார்டுகளிலிருந்து மாற்றுப் பரிவர்த்தனைகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

நன்றி: குரியஸ்

தமிழில்: பிரகாசு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018