மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

தூபம் போடும் தினகரன்

தூபம் போடும் தினகரன்

செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காகவே அவை முன்னவர் பதவி பன்னீர்செல்வத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாக ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் 8ஆம் தேதி சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், அவை முன்னவர் பதவியிலிருந்து அமைச்சர் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்பதவியில் நியமனம் செய்யப்பட்டார். இதற்கு முன்னதாக அவரிடம் இருந்த அமைச்சரவை கூடுதல் இலாகாக்களும் பறிக்கப்பட்டது. அணிகள் இணைந்ததால் கட்சியின் அவைத் தலைவர் பதவியும் மதுசூதனன் வசமானது.

ஆட்சிமன்றக் குழுவிலோ அல்லது ஒருங்கிணைப்புக் குழுவிலோ கட்சியில் சீனியரான செங்கோட்டையனுக்கு எவ்வித பொறுப்பும் வழங்கப்படவில்லை. தொடர்ச்சியான இதுபோன்ற செயல்களால் செங்கோட்டையன் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு மதுரையில் நேற்று (ஜனவரி 5) பதிலளித்த ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன், “இது மக்களால் நிராகரிக்கப்பட்ட ஆட்சி, ஒரு துரோகி மற்றொரு துரோகிக்கு பதவி கொடுத்துள்ளார். இதில் அவை முன்னவராக பன்னீர்செல்வத்தை போட்டால் மட்டும் சட்டமன்றத்தில் என்ன ஆகப் போகிறது. அமைச்சர் செங்கோட்டையனை அசிங்கப்படுத்துவதற்காக இதுபோன்று செய்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

சனி 6 ஜன 2018