மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வெப் சீரிஸில் மாதவன்

வெப் சீரிஸில் மாதவன்

கதாநாயகனாக மட்டுமல்லாமல் நல்ல கதையம்சம் உள்ள படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த எந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடிக்கக்கூடியவர் மாதவன். தமிழில் மட்டுமல்லாமல் இந்தியிலும் தொடர்ந்து நடித்துவரும் மாதவன் தற்போது அமேசான் நிறுவனம் தயாரிக்கும் ஒரு வெப் சீரிஸில் நடித்துள்ளார்.

'ப்ரீத்' என்ற பெயரில் உருவாகியுள்ள இந்தத் தொடர், ஆக்ஷன் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. மகனைக் காப்பாற்றுவதற்காக கிரிமினலாக மாறும் தந்தையின் கதை என விளம்பரப்படுத்தப்பட்டது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மாதவனுடன் அமித் சாட், சப்னா பாபி, நீனா குல்கர்னி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மயன்க் ஷர்மா இயக்கியுள்ள ‘ப்ரீத்’ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகிறது.

ஜனவரி 26ஆம் தேதி முதல் அமேசான் ப்ரைம் இணையதளத்திலும், அதன் ஆப் மூலமாகவும் இந்தத் தொடரை காணலாம்.

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

3 நிமிட வாசிப்பு

பின் இருக்கை நபருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

15 நிமிட வாசிப்பு

சிறப்புக் கட்டுரை: குழந்தை வளர்ப்பென்ன சவாலா?

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

3 நிமிட வாசிப்பு

7000 போலி ஆதார் அட்டைகளை தயாரித்த நபர் கைது!

சனி 6 ஜன 2018