மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

சம ஊதியம்: முதலில் கட்டாயமாக்கிய நாடு!

சம ஊதியம்: முதலில் கட்டாயமாக்கிய நாடு!

தங்கள் ஊதிய நடைமுறைகள் பெண்களுக்கு எதிராக வேறுபாடு காட்டுவதில்லை என்பதை நிரூபிக்க, ஐஸ்லாந்தில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும். பாலின ஊதிய இடைவெளிகளைக் குறைப்பதற்காக நடவடிக்கை எடுத்த முதல் நாடாக ஐஸ்லாந்து கருதப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் ஜூன் மாதம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்ட சட்டமானது, புத்தாண்டு காலத்தில் நடைமுறைக்கு வந்தது. இது 5.7 சதவிகித ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையிலான தற்போதைய ஊதியத்தை அழிக்க முற்படுகிறது. இது அனுபவம், கல்வி வேலை நேரம் ஆகியவற்றால் விவரிக்க முடியாது.

அமெரிக்காவின் மினிசோட்டா மற்றும் மற்ற நாடுகளில் சம சம்பள கொள்கை சான்றிதழ் இருந்தாலும், தனியார் மற்றும் பொது நிறுவனங்களில் இதை கட்டாயமாக்குவதில் முதலில் உள்ளது.

வட அட்லாண்டிக் தீவில் 330,000 பேர் வசிக்கின்றனர். இங்கு, 2022ஆம் ஆண்டுக்குள் பாலின ஊதிய இடைவெளியை அகற்ற விரும்புகிறது.

25க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கொண்ட நிறுவனங்கள் ஒரு அங்கீகாரம் பெற்ற தணிக்கையாளரிடமிருந்து ‘சம ஊதிய சான்றிதழ்’ பெற வேண்டும். 250க்கும் அதிகமான ஊழியர்கள் கொண்ட பெரிய நிறுவனங்கள் இந்தாண்டு இறுதிக்குள் சான்றிதழ் பெற வேண்டும். சிறிய நிறுவனங்கள் 2021ஆம் ஆண்டுக்குள் சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018