மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா

கிச்சன் கீர்த்தனா

சின்ன சின்ன விஷயங்களே பெரிய மாற்றங்களைக் கொண்டுவருகின்றன என்பது உண்மைதான். சுவையான சமையலுக்கும் அது பொருந்தும். சின்ன சின்ன விஷயங்களை நுணுக்கமாகச் செய்வதால் அபார ருசியுடன் தனித்துவமாகத் தெரியும் நம் சமையல். ஒருவிதத்தில் நாம் இதைகூட ஸ்மார்ட் வொர்க் என்றும் கூறலாம். அப்படியான உங்கள் ஸ்மார்ட் கிச்சனில் ஸ்மார்ட் சமையலும் செய்திட சில ஸ்மார்ட்டான டிப்ஸ் இதோ...

* ரசத்துக்கான பொருள்களைப் பொடி பண்ணும்போதே, சிறிது கடுகு சேர்த்துக்கொண்டால் தெளிந்த ரசம் கிடைக்கும்.

* மிக்ஸியில் வெந்தயம், ஏலக்காய் போன்றவற்றை அரைத்தால், அவற்றின் வாசனை எளிதில் போகாது. அதன் பிறகு, மிக்ஸியில் ஒரு கைப்பிடி வேர்க்கடலைப் போட்டு அரைத்து எடுத்தால், வாசனை முற்றிலும் நீங்கிவிடும்.

* எள் உருண்டை செய்வதற்கு, எள்ளை தண்ணீரில் அலசினால், கையில் ஒட்டிக்கொண்டுவிடும். பெரிய ஓட்டை உள்ள சல்லடை அல்லது வடிகட்டியில் எள்ளைப் போட்டு தண்ணீருக்குள் அமிழ்த்தி எடுத்தால், எளிதாக அலசிவிடலாம்.

* கேரட்டில் சூப் செய்யும்போது, அதில் சிறிது சேமியாவை வறுத்துப் போடவும். சூப் திக்காக இருக்கும். பார்க்கவும் அழகாக இருக்கும்.

* போளிக்குப் பூரணம் செய்யும்போது, அது நீர்த்துவிட்டால், அடுப்பில் வைத்து சிறிது நெய் ஊற்றிக் கிளறவும். கெட்டியாகிவிடும்.

* உருளைக்கிழங்கு வறுவல் செய்யும்போது, கிழங்கின்மீது சிறிது பயத்த மாவைத் தூவி, பின் பொரித்தெடுக்கவும். வறுவல் மொறுமொறுப்பாக இருக்கும்.

* அவல் பொரியை அப்படியே பாகில் போடுவதற்குப் பதில், பொரியை வெறும் கடாயில் வறுத்து பிறகு பாகில் போட்டு உருண்டை பிடித்தால், பொரி உருண்டை மொறுமொறுப்பாக இருக்கும்.

* சர்க்கரையை அப்படியே காபி, டீ, ஜூஸ் போன்றவற்றில் இடும்போது, கரைவதற்கு அதிக நேரம் பிடிக்கும். சில நேரங்களில் கரையாமல் இருந்து வீணாவதும் உண்டு. இதற்குப் பதிலாக சர்க்கரையைப் பொடி செய்து வைத்துக்கொண்டு பயன்படுத்தினால், நேரமும் மிச்சம். சர்க்கரையும் வீணாகாது.

* மிளகாய் பஜ்ஜி செய்யும்போது, மிளகாயை நீளவாக்கில் கீறவும். அதனுள் சிறிது உப்பு, இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு விடவும். பிறகு எண்ணெயில் போட்டு பஜ்ஜி செய்யவும். டேஸ்ட்டாக இருப்பதோடு, காரமும் இருக்காது.

* பாகற்காய் பொரியல் செய்யும்போது சிறிது கேரட், வெங்காயம் துருவிப் போட்டு நிறைய கறிவேப்பிலை சேர்த்தால் கசப்பே தெரியாது.

* பருப்பு வடைக்கு அரைக்கும்போது, ஊறவைத்த பருப்பு மற்றும் பொருள்களுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும். (நேற்றைய வாழைப்பூ வடை செய்யும் முறையிலும் கூறியிருந்தேன்)

* தயிர் வடை அல்லது சாம்பார் வடை செய்ய உளுந்து ஊறப் போடும்போது, உளுந்தின் கால் பங்கு அளவுக்கு மசூர் தால் சேர்த்துப் போடுங்கள். வடை மிகவும் மெதுவாக இருக்கும்.

* சமோசாவை பொரிப்பதற்கு முன்பு, ஒரு சிட்டிகை சோடா உப்பை எண்ணெய் காய்ந்ததும் போட்டுப் பொரிய விடவும். பிறகு சமோசாவைப் பொரித்தெடுக்கவும். மொறுமொறுப்பு மாறாமல் இருக்கும்.

* காப்பர் பாட்டம் உள்ள பாத்திரத்தில் ஐஸ்க்ரீம் கலவையை ஊற்றி வைத்தால், ஐஸ்க்ரீம் சீக்கிரம் கெட்டியாகிவிடும்.

கீர்த்தனா சிந்தனைகள் :

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

2 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் பணி!

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா? ...

5 நிமிட வாசிப்பு

கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் - தினமும் மட்டன், முட்டை சாப்பிடலாமா?

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

4 நிமிட வாசிப்பு

இன்று முதல் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு நேரடி விமானம்!

சனி 6 ஜன 2018