மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

‘அம்பேத்கர்வாதி’ மோடி பதிலளிக்க வேண்டும்!

‘அம்பேத்கர்வாதி’ மோடி பதிலளிக்க வேண்டும்!

‘மகாராஷ்டிராவில் தலித் மக்கள்மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து தன்னை அம்பேத்கர்வாதியாக காட்டிக்கொள்ளும் பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்’ என்று ஜிக்னேஷ் மேவானி எம்எல்ஏ குத்தலாகக் கூறியுள்ளார்.

டெல்லியில் நேற்று (ஜனவரி 5) செய்தியாளர்களைச் சந்தித்த தலித் தலைவரும் குஜராத் வத்காம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜிக்னேஷ் மேவானி, “வன்முறையைத் தூண்டும்விதமாக நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை, நான் பயிற்சிபெற்ற வழக்கறிஞர். சட்டத்தை நான் மதிக்கிறேன். தற்போது நான் சட்டத்தை இயற்றுபவராகவும் உள்ளேன்” என்று குறிப்பிட்ட அவர், “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் வெறும் 99 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றதால் பாஜகவினரும் சங்கிகளும் என்னைக் குறிவைத்து தாக்குதல் நடத்துகின்றனர்.

என்னைப் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிக்கே, தலித் தலைவருக்கே இந்த நிலை என்றால் ஒரு சாதாரண ஏழைத் தலித்தின் நிலைமையை எண்ணிப் பாருங்கள். அவர்கள் எப்படிப் பாதுகாப்பாக உணர்வார்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “தலித்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினாலோ எனது நற்பெயருக்குத் தொடர்ந்து களங்கம் விளைவித்தாலோ பிரதமர் மோடிக்கு 2019இல் நாங்கள் பாடம் கற்பிப்போம். அம்பேத்கரைப் பின்பற்றுபவரும் தன்னை ஓர் அம்பேத்கர்வாதியாக பிரகடனம் செய்துள்ளவருமான பிரதமர் மோடி ஏன் அமைதியாக உள்ளார்? தலித்கள் ஏன் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர்? தலித்கள் ஏன் இந்தியாவில் பாதுகாப்பாக இருக்க முடியவில்லை?” என தொடர் கேள்விகள் எழுப்பியுள்ள அவர், தலித்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகப் பிரதமர் மோடி மௌனம் கலைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

டெல்லியில் விரைவில் பேரணி ஒன்று நடத்தப்படும் என மேவானி தெரிவித்தார். “முற்போக்கு சிந்தனையுடைய மாணவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், அம்பேத்கர் கொள்கை பிடிப்பாளர்கள் இணைந்து விரைவில் டெல்லியில் பிரதமர் மோடியின் அலுவலகம் நோக்கி பேரணி நடத்தவிருக்கிறோம். அப்போது மனு சாஸ்திரத்தை ஒரு கையிலும் அரசியல் சாசனத்தை மற்றொரு கையிலும் ஏந்தி பேரணியாகச் செல்கிறோம். அங்கே பிரதமர் அலுவலகம் முன் நின்று, அவர் மனு சாஸ்திரத்தையா அல்லது அரசியல் சாசனத்தையா எதைத் தேர்வு செய்வார் என உரக்கக் கேட்போம்.

இங்கே, சக மனிதர்களிடையே சமத்துவத்துக்கே பாடாய்ப்படும் வேளையில், பிரதமர் மோடியோ டிஜிட்டல் இந்தியா குறித்தும், செவ்வாய் கிரகத்தில் குடியிருப்புகள் அமைப்பது குறித்தும் சந்திரனில் தண்ணீர் கண்டுபிடிப்பது குறித்தும் பேசிக் கொண்டிருக்கிறார்” என்று ஜிக்னேஷ் விமர்சித்துள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

சனி 6 ஜன 2018