மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 6 ஜன 2018

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 11% உயர்வு!

வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 11% உயர்வு!

நடப்பு நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் இந்தியாவின் வேளாண் பொருள்கள் ஏற்றுமதி ரூபாய் அடிப்படையில் 11 சதவிகிதமும், டாலர் அடிப்படையில் 15 சதவிகிதமும் உயர்ந்துள்ளதாக வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

2017-18 நிதியாண்டின் ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் சார்பாக ஏற்றுமதி செய்யப்பட்ட பொருள்களில் அதிகபட்சமாக 26.21 லட்சம் டன் அளவிலான பாஸ்மதி அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.16,838 கோடியாகும். 2016-17 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் மொத்தம் 25.78 லட்சம் டன் அளவிலான பாஸ்மதி அரிசி ரூ.13,571 கோடி மதிப்புக்கு மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தது. பிற அரிசி வகைகள் ஏற்றுமதியும் அளவு அடிப்படையில் 41.17 லட்சம் டன்னிலிருந்து 55.70 லட்சம் டன்னாகவும், மதிப்பு அடிப்படையில் ரூ.10,437 கோடியிலிருந்து ரூ.14,804 கோடியாக உயர்ந்துள்ளது.

கொத்தவரங்காய் ஏற்றுமதி ரூ.1,672 கோடியிலிருந்து ரூ.2,588 கோடியாகவும், பதப்படுத்தப்பட்ட பழங்கள் மற்றும் பழச்சாறு ஏற்றுமதி ரூ.2,510 கோடியிலிருந்து ரூ.2,601 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு ஏற்றுமதி மேம்பாட்டு வாரியம் சார்பாக ஏற்றுமதி செய்யப்படும் பொருள்களில் சுமார் 23.4 சதவிகிதப் பங்களிப்பைக் கொண்டுள்ள எருமை இறைச்சி ஏற்றுமதி இம்முறை அளவு அடிப்படையிலும் மதிப்பு அடிப்படையிலும் சரிவைச் சந்தித்துள்ளது. அதாவது 2016-17 ஏப்ரல் - நவம்பரில் ரூ.18,103 கோடிக்கு ஏற்றுமதியாகியிருந்த நிலையில், இந்த ஆண்டில் ஏற்றுமதி மதிப்பு ரூ.17,799 கோடியாகக் குறைந்துள்ளது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

சனி 6 ஜன 2018