மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

கிச்சன் கீர்த்தனா - வாழைப்பூ வடை!

கிச்சன் கீர்த்தனா - வாழைப்பூ வடை!

வாரம் ஒருமுறை வடை செய்து சாப்பிடாவிட்டால் ஏதோ குற்றம் செய்ததைப்போல் வீட்டில் இருப்பவர்கள் பார்க்கிறார்கள். வெளியில் வாங்கினாலும் வீட்டிலேயே சென்ற மாதம் செய்திருந்தாலும் மீண்டும் மீண்டும் செய்து சாப்பிடும் அலாதியே தனி.

ஒவ்வொரு முறை செய்யும்போதும் புதுவிதமான முறைகளை கையாண்டால் அலுப்புத்தட்டாமல் விரும்பி சுவைக்கலாம். அதுபோல வாழைப்பூ வடைக்கு அரைக்கும்போது, ஊற வைத்த பருப்பு மற்றும் பொருள்களுடன் ஒரு டேபிள்ஸ்பூன் புழுங்கலரிசி சேர்த்து அரைக்கவும். மாவில் சிறிது நெய் சேர்த்து வடை தட்டவும். வடை கரகரப்பாக நல்ல சுவையுடன் இருக்கும். பிறகென்ன தேவையான பொருள்கள்தான்...

தேவையான பொருள்கள்:

கடலைப்பருப்பு – 2 கிண்ணம், வாழைப்பூ பொடியாக நறுக்கியது – 1 கிண்ணம், வெங்காயம் பொடியாக நறுக்கியது - 1 கிண்ணம், சோம்பு – 1 தேக்கரண்டி, பூண்டு – 6 பல் தோலுடன் போடவும், சிவப்பு மிளகாய் – 5, பெருங்காயம் – அரை தேக்கரண்டி, கறிவேப்பிலை பொடியாக நறுக்கியது – சிறிதளவு, உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – பொரிப்பதற்கு.

செய்முறை:

கடலைப்பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். அதன்பின் கடலைப்பருப்புடன் சிவப்பு மிளகாய், பூண்டு, சோம்பு ஆகியவற்றைத் தண்ணீரில்லாமல் கொரகொரப்பாக அரைக்கவும். அரைத்ததை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், வாழைப்பூ, கறிவேப்பிலை, பெருங்காயம், உப்புப் போட்டு கையால் நன்கு பிசைந்துகொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெயைக் காய வைக்கவும். காய்ந்ததும் சிறு தீயில் வைத்துக்கொள்ளவும். மாவில் ஒரு சிறு உருண்டை எடுத்துக்கொண்டு உள்ளங்கையில் வைத்து லேசாக அழுத்தி எண்ணையில் போடவும். இதுபோல் 4 அல்லது 5 போட்டுக் கொண்டு சிறு தீயில் வேக விடவும். இதேபோல் எல்லாவற்றையும் போட்டு எடுக்கவும். சுடச்சுட சாப்பிட இதோ தயார் மொறுமொறுப்பான வாழைப்பூ வடை.

கீர்த்தனா சிந்தனைகள்:

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் பணி!

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

2 நிமிட வாசிப்பு

முன்பதிவில்லாத எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்!

225 பொறியியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்!

3 நிமிட வாசிப்பு

225 பொறியியல் கல்லூரிகளுக்கு  நோட்டீஸ்!

வெள்ளி 5 ஜன 2018