மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பைக் ரேஸ் : விரட்டும் நான்கு தனிப்படை!

பைக் ரேஸ் : விரட்டும் நான்கு தனிப்படை!

சாலைத் தடுப்புகளை தீப்பொறி பறக்க சாலையில் இழுத்து சென்ற இளைஞர்களைப் பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன என சென்னை போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 2ஆம் தேதி அன்று இரவு மெரீனா காமராஜர் சாலை மற்றும் காந்தி மண்டபம் சாலையில் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த வைக்கப்பட்டிருந்த சாலை தடுப்பை பைக்கில் சென்ற இளைஞர்கள் வெகுதூரம் தீப்பொறி பறக்க இழுத்துச் சென்று பிற வாகன ஓட்டிகளை அச்சுறுத்தினர். மேலும், சாலையிலேயே சாலை தடுப்பை போட்டு விட்டு தப்பிச் சென்றனர். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

29 நொடிகள், 18 நொடிகள் ஓடக்கூடிய வீடியோக்களை பார்த்த போக்குவரத்து போலீஸார், அந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து சென்னை மாநகர போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸர் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனராக அருண் ,புத்தாண்டில் மது அருந்தி வாகனங்களை ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

1 நிமிட வாசிப்பு

வேலைவாய்ப்பு: பெல் நிறுவனத்தில் பணி!

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

2 நிமிட வாசிப்பு

வீட்டுக்கடன் வட்டியைக் குறைக்கும் எஸ்பிஐ!

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

4 நிமிட வாசிப்பு

கொரோனா மூன்றாவது அலை: நிபுணர்களின் கருத்து!

வெள்ளி 5 ஜன 2018