மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

டீசல் கார்களின் சந்தைப் பங்கு சரிவு!

டீசல் கார்களின் சந்தைப் பங்கு சரிவு!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு இடையேயான விலை வித்தியாசம் நெருங்கி வருவதால் டீசல் கார்களுக்கான சந்தைப் பங்கு குறைந்து வருகிறது. மக்கள் பெட்ரோல் கார்களை வாங்குவதில் மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர். இதனால் 50 சதவிகிதமாக இருந்த டீசல் கார்களின் சந்தைப் பங்கு 23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சுற்றுச் சூழல் மாசுபாடு மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. வாகனங்களின் புகையால் ஏற்படும் இம்மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசு தரப்பிலிருந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 10 வருடங்களுக்கு மேல் பழைமையான வாகனங்களைத் தடை செய்வது, வாகன என்ஜின்களின் தரத்தை உயர்த்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளும் அதில் அடங்கும். இந்தியாவை முழுவதுமாக எலெக்ட்ரிக் வாகன மயமாக்கும் இலக்கையும் மத்திய அரசு கொண்டுள்ளது. காற்று மாசுபாட்டுக்கு டீசல் வாகனங்கள் பெரும் காரணமாக இருப்பதால் அவற்றின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு வருகிறது.

டீசல் மற்றும் பெட்ரோல் விலைக்கு இடையேயான இடைவெளியும் குறைந்து வருவதால் கார் வாங்குபவர்கள் பெட்ரோல் கார்களையே தேர்ந்தெடுக்கின்றனர். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆய்வுப்படி, மொத்த கார் விற்பனையில் 2012-13ஆம் ஆண்டில் 50 சதவிகிதமாக இருந்த டீசல் கார்களின் பங்கு (ஸ்போர்ட்ஸ் கார்கள் தவிர்த்து) இப்போது 23 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இந்த சந்தைப் பங்கு இன்னும் குறைய வாய்ப்புள்ளதாகவும், டீசல் கார்களை மக்கள் பெரிதும் விரும்புவதில்லை எனவும் மாருதி சுசுகி நிறுவனத் தலைவரான ஆர்.சி.பார்கவா கூறுகிறார்.

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

4 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் சீசன் 6 எப்போது - போட்டியாளர்கள் யார்?

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

3 நிமிட வாசிப்பு

26 பில்லியன் டாலர்களைச் செலவழிக்கும் இந்தியா!

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

3 நிமிட வாசிப்பு

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு!

வெள்ளி 5 ஜன 2018