மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

குறைந்தபட்ச தண்டனை கேட்கும் லாலு

குறைந்தபட்ச தண்டனை கேட்கும் லாலு

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4வது முறையாகத் தண்டனை விவரங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

கால்நடைகள் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் உட்பட 16 பேரை குற்றவாளிகள் என ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி சிவபால் சிங் கடந்த மாதம் 23ஆம் ததி தீர்ப்பளித்தார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விவரம் ஜனவரி 3ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். தீர்ப்பு வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், இறந்துபோன 2 வழக்கறிஞர்களுக்கு நேற்று முன்தினம் நீதிமன்றத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றதையடுத்து தீர்ப்பு விவரம் நேற்று ஒத்தி வைக்கப்பட்டது.

இதையடுத்து லாலு பிரசாத் யாதவ் நேற்று நீதிமன்றத்துக்கு வந்தார். அப்போது, நீதிபதி சிவபால் சிங்கிடம், “எனக்கு சிறையில் மிகவும் குளிர்கிறது” என தனக்கு உரிய நகைச்சுவை பாணியில் குறிப்பிட்டார்.

“குளிர்ந்தால், தபாலா வாசியுங்கள்” என்று பதிலளித்த நீதிபதி, உங்கள் ஆதரவாளர்கள் தீர்ப்பு குறித்து சாதி ரீதியாக விமர்சிக்கின்றனர் என்றும் கூறினார்.

உடனடியாக, இப்போது கலப்பு திருமணம் அதிகரித்துவிட்டது அல்லவா, அதனால் அவர்கள் அப்படிக் கூறியிருப்பார்கள் ” என்று லாலு பதிலளித்தார்.

தண்டனை விவரத்தை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் அறிவிப்பதை விரும்புகிறீர்களா என லாலுவிடம் நீதிபதி சிவ்பால் கேட்டார். “நீதிமன்றம் விரும்பினால் நீதிமன்றத்தில் ஆஜராகத் தயார்” என்று லாலு பதிலளித்தார்.

பின்னர் நீதிபதி, “தீர்ப்பை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து நாளை முடிவு செய்வேன். அதேநேரத்தில், உங்கள் ஆதரவாளர்கள் என்னிடம் போனில் பேசுகிறார்கள். எனினும் நான் சட்டப்படி தான் முடிவு செய்வேன்” என்று விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

அதன்படி, இன்று நீதிமன்றம் தொடங்கியதும் லாலு சார்பில் அவரது வழக்கறிஞர் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார், அதில், இந்த ஊழலில் தனக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும், வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு குறைந்தபட்ச தண்டனையை வழங்க வேண்டும்” என்றும் கூறப்பட்டிருந்தது.

அதேநேரத்தில், லாலுவுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும். அப்போது தான் யாரும் இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார்கள் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டது.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018