மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

பட்டாசுக்குத் தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஏற்பு!

பட்டாசுக்குத் தடை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றம் ஏற்பு!

நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று (ஜனவரி 5) விசாரணைக்கு ஏற்றுள்ளது.

.நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரி 2015 ஆம் ஆண்டு அர்ஜுன் கோபால் உள்ளிட்ட மூன்று குழந்தைகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர் இதைத்தொடர்ந்து டெல்லி உட்படச் சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசு வெடிப்பதனால் காற்று மாசுபாடு அதிகரிப்பதாகக் கூறி பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதனால் சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர்களிடம் வட மாநில உற்பத்தியாளர்கள் கொள்முதலை நிறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் வழக்கைத் திரும்ப பெறக் கோரியும், சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் கடந்த டிசம்பர் 26 முதல் 11 நாட்களாகப் பட்டாசு உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்குத் தடை விதிக்கக் கோரி இடைக்கால மனுவைத் தாக்கல் செய்தார். அதில், சுற்றுச்சூழலுக்குத் தீங்கு ஏற்படுத்தும் பிற பொருட்களின் தயாரிப்பையும் தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018