மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

குடிமகன் என்று கூறினேனா?

குடிமகன் என்று கூறினேனா?

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்த கேள்விக்கு, தான் குடிமகன்கள் கட்சி என்று கூறியதன் அர்த்தம் திரித்து வெளியிடப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ள நிலையில், அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் ஆதரவும், எதிர்ப்பும் குவிந்துவருகின்றன. நேற்று சென்னையில் நடைபெற்ற லோக் ஆயுக்தா போராட்டத்தின்போது பாமக நிறுவனர் ராமதாஸிடம் இது குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரு குடிமகன்கள் இணைந்து கட்சி ஆரம்பிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார். இது நாளிதழ்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியாகியது. ரஜினியைக் குடிமகன் என்று ராமதாஸ் குறிப்பிட்டதாகவும் தகவல் வெளியாகியது.

இந்தச் சூழ்நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இன்று (ஜனவரி 5) பாமக நிறுவனர் ராமதாஸ் தனது முகநூல் பதிவில், "நடிகர் ரஜினி கட்சி தொடங்க இருப்பது குறித்து செய்தியாளர்கள் கருத்துக் கேட்ட போது, ‘‘ ஏற்கனவே கூறியிருக்கிறேன்... இரு குடிமகன்கள் சேர்ந்து ஒரு கட்சி தொடங்க வேண்டும் என்று நினைத்தால் ஆரம்பிக்கலாம்’’ என்று கூறினேன். அரசியல் கட்சி தொடங்கக் குறைந்தது இருவராவது தேவை என்ற அடிப்படையில் தான் இதைக் கூறினேன். இதில் குடிமகன்கள் என்று இந்தியக் குடிமக்கள் (CITIZEN) என்ற பொருளில்தான் கூறினேன். ஆனால், சில பத்திரிகைகளில் அதைத் தவறான பொருள்படும் வகையில் திரித்ததுடன், ‘‘சிரித்தபடியே 2 குடிமகன் என்ற வார்த்தையை அழுத்தமாகக் கூறினார்’’ என்றும் அடைப்புக்குறிக்குள் வெளியிட்டுள்ளனர்.

“ரஜினியின் அரசியல் கட்சி குறித்து முதலில் கேள்வி கேட்ட போது இரு குடிமகன்கள் சேர்ந்து கட்சி தொடங்கலாம் என்று கூறினேன். மீண்டம் அதே கேள்வியை வேறு பொருளில் கேட்டபோது அதையே மீண்டும் கூறினேன். இதில் அழுத்தம் கொடுத்துக் கூறுவதற்கு எதுவும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 ஜன 2018