மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவு!

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப உத்தரவு!

போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்று பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுடன் நடந்த ஊதிய உயர்வு ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இதனால் பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வழக்கறிஞர் விஜேந்திரன் என்பவர் போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் முறையிட்டிருந்தார்.

இதை விசாரித்த நீதிமன்றம், தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க முடியாது. மனு தாக்கல் செய்யப்பட்டால் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவித்தது.

பேச்சுவார்த்தை நடக்கும்போதே போக்குவரத்து ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவே ஊழியர்களைப் பணிக்குத் திரும்ப நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் விஜேந்திரன் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான தமிழக அரசின் தலைமை அரசு வழக்கறிஞர் விஜய் நாராயணன், “பத்துக் கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசு அளிக்க முன்வந்த ஊதிய உயர்வை 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஏற்றுக்கொண்டன, 14 சங்கங்கள் புறக்கணித்து வேலை நிறுத்தம் செய்கின்றன என்று தெரிவித்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வேலை நிறுத்தத்தால் பொது மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று வாதாடினார்.

இரு வாதங்களையும் ஏற்ற நீதிபதிகள் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். இல்லையெனில் பணிநீக்கம் செய்ய நேரிடும் என்று எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் நலன் கருதியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய சேவைகள் பட்டியலில் இருப்பவர்கள் திடீர் போராட்டங்களில் ஈடுபடக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். அப்போது ஆம்புலன்ஸ், செவிலியர்களின் போராட்டங்களுக்குப் பிறப்பித்த உத்தரவையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

போராடும் சங்கத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வேலைநிறுத்தம் குறித்து 14 போக்குவரத்து சங்கங்கள் வரும் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 5 ஜன 2018