மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவோம்!

சாதியற்ற தமிழர்களாய் ஒன்றிணைவோம்!

அயோத்தி தாசப் பண்டிதர் கூறியதுபோல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம் என இயக்குநர் பா.இரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பா.இரஞ்சித்தின் ‘நீலம் பண்பாட்டு மையம்’ மற்றும் ‘மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்’ இணைந்து நடத்தும் ‘த கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ நிகழ்ச்சி, நாளை மாலை 6 மணிக்கு சென்னையில் நடைபெற இருக்கிறது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சி.எஸ்.ஐ. பெய்ன் பள்ளியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பெற்றிருக்கும் கலைஞர்கள் சென்னையின் பல்வேறு பகுதிகளில் கானா, ராப் இசையில் மிகவும் பிரபலமானவர்கள். இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளார் ரஞ்சித்.

“மக்களுக்கான அரசியலைப் பேசவும், மக்களின் பிரச்னைகளைப் பேசவும் கலையைப் பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கத்தை, கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்தச் சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே, கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படித் தமிழகத்தின் எல்லாக் கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டுவருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்தி தாசப் பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு, இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்” என்று நிகழ்ச்சி குறித்த நோக்கத்தை கூறியுள்ளார் ரஞ்சித்.

நிகழ்வு தொடர்பாக இயக்குநர் சுசீந்தீரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “இந்த நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதை சந்தோஷமாகவும் பெருமையாகவும் கருதுகிறேன். நம்முடைய கலாச்சார இசையை நாம் மீட்டெடுப்பதும் அடுத்தகட்டத்திற்கு அழைத்து செல்வதும் இப்போது மிக முக்கியம். நீலம் என்ற அமைப்பின் மூலம் ரஞ்சித் ஏராளமான விஷயங்களைச் செய்துவருகிறார். ரஞ்சித் மற்றும் அவரது தோழர்களுக்கு எனது வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

4 நிமிட வாசிப்பு

உணவு இல்லை, உறக்கமில்லை: நித்யானந்தா

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்? ...

3 நிமிட வாசிப்பு

எலோன் மஸ்க் ட்விட்டர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்திருப்பது ஏன்?

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் ...

2 நிமிட வாசிப்பு

மூத்த குடிமக்களுக்கான சலுகை ரத்து: ரயில்வேக்கு ரூ.1,500 கோடி கூடுதல் வருமானம்!

வெள்ளி 5 ஜன 2018