மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

முயல் வேகத்தில் கிராமப்புறச் சாலைப் பணிகள்!

முயல் வேகத்தில் கிராமப்புறச் சாலைப் பணிகள்!

மத்திய அரசின் ’பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா’ திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் மிக வேகமாக நடந்துவருவதாகவும், நாள் ஒன்றுக்குச் சராசரியாக 130 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கப்பட்டுவருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஜனவரி 4ஆம் தேதி மக்களவையின் கேள்வி நேரத்தின்போது இது பற்றி எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நிதின் கட்கரி பதிலளிக்கையில், “2019ஆம் ஆண்டின் மார்ச் மாதத்துக்குள் நாட்டின் அனைத்துக் குடியிருப்புப் பகுதிகளுக்கும் இடையே போக்குவரத்து வசதியை ஏற்படுத்திட மத்திய அரசானது திட்டமிட்டுச் செயலாற்றி வருகிறது. பிரதான் மந்திரி கிராம் சடக் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த மூன்று ஆண்டுகளில் சாலை அமைக்கும் பணிகளின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது நாள் ஒன்றுக்குச் சராசரியாக 130 கிலோ மீட்டர் அளவிலான சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது கடந்த ஏழு ஆண்டுகளில் அதிகபட்ச அளவாகும்” என்றார்.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 ஜன 2018