மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

முத்தலாக் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல்?

முத்தலாக் மசோதா: பட்ஜெட் கூட்டத்தொடரில் மீண்டும் தாக்கல்?

முத்தலாக் முறைக்கு தடை விதிக்கும் மசோதா, குளிர்கால கூட்டத்தொடரின் கடைசிநாளான இன்றும் (ஜனவரி 5) மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. ஜனவரி 29ஆம் தேதி ஆரம்பமாகும் பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

முஸ்லிம் பெண்களின் திருமண உரிமையைப் பாதுகாக்கும் பொருட்டு, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதனை மீறும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று இந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம், பாஜக பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையில் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.

ஜனவரி 3ஆம் தேதியன்று மாநிலங்களவையில் முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்ற விவாதத்தில், இந்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுவுக்கு அனுப்பி மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உரத்த குரலில் தெரிவித்தன காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள். ஆனால் பாஜக அமைச்சர்கள் இதனை ஏற்கவில்லை. இதனால், இந்த மசோதா நிறைவேற்றப்படாமலேயே இரண்டு நாட்களும் மாநிலங்களவை முடங்கியது.

இந்த நிலையில், கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று இந்த மசோதா நிறைவேற்றப்படலாம் என்று தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, ஆளும் பாஜக மற்றும் எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கொறடாக்கள் தங்கள் கட்சியினர் கட்டாயம் அவையில் இருக்க வேண்டுமென்று உத்தரவு பிறப்பித்தனர். இரு கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் இருந்த நிலையில், எந்தவித முடிவும் எட்டப்படாமலேயே குளிர்கால கூட்டத்தொடர் நிறைவுற்றது. அடுத்து வரவுள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியானது.

இதனையடுத்து, 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 29ஆம் தேதி தொடங்குவதாக அறிவித்தார் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த்குமார். ”ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார். அன்றைய தினமே பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதியன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

வரும் ஜனவரி 29 முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி நடைபெறும் என்றும், மார்ச் 5 முதல் ஏப்ரல் 6ஆம் தேதி வரை இரண்டாம் பகுதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு முதல் ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்வது தடை செய்யப்பட்டது; பிப்ரவரி இறுதி அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்குப் பதிலாக, பிப்ரவரி 1ஆம் தேதியே பட்ஜெட்டை வெளியிட்டார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த ஆண்டும் இந்த வழக்கம் தொடர்கிறது.

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் ...

2 நிமிட வாசிப்பு

வாணிபக்கழக கிடங்கில் வட மாநிலத்தவர்: தமிழகத் தொழிலாளர்கள் திரண்டதால் பரபரப்பு!

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

3 நிமிட வாசிப்பு

திருப்பதி தேவஸ்தானத்திடம் 16 கோடி ரூபாய் கோரிய மாநில அரசு!

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ...

4 நிமிட வாசிப்பு

சண்டே ஸ்பெஷல்: மாத்திரைகள் - சாப்பாட்டுக்கு முன் / பின்... பரிந்துரைக்கப்படுவது ஏன்?

வெள்ளி 5 ஜன 2018