மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

வெள்ளை மாளிகையில் செல்போனுக்குத் தடை!

வெள்ளை மாளிகையில் செல்போனுக்குத் தடை!

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்குள் பாதுகாப்பு கருதி ஊழியர்கள் செல்போன் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது.

வெள்ளை மாளிகையில் தொழில்நுட்ப அமைப்புகளின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாடு டிரம்ப் நிர்வாகத்திற்கான முன்னுரிமை என்பதால், அடுத்த வாரம் முதல் விருந்தினர் மற்றும் பணியாளர்களின் தனிப்பட்ட செல்போனுக்கு அனுமதி கிடையாது. இந்தத் தடை அதிபருக்கு கிடையாது. செல்போன் தடை செய்வது குறித்து பல மாதங்களாக விவாதம் செய்யப்பட்டது. ஆனால், செயல்படுத்தப்படவில்லை. வெள்ளை மாளிகையின் தலைமை அலுவலர் ஜான் கெல்லி என்பவர் ஜூலை மாதம் நிர்வாகத்திற்குள் நுழைந்த போது இந்த யோசனையைத் தெரிவித்தார். இந்தத் தடை உயதிகாரி உட்பட அனைவருக்கும் பொருந்தும்.

வெள்ளை மாளிகையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் ரகசியமாகப் பத்திரிகைகளுக்கு செய்திகளாக வழங்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டை அதிபர் டிரம்ப் எழுப்பியிருந்தார். அதை தடுக்கவே இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

4 நிமிட வாசிப்பு

பதிவுத் துறை வருவாய் கிடுகிடு உயர்வு:காரணம் என்ன?

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

3 நிமிட வாசிப்பு

நிலம் இல்லாத ஏழைகளுக்கு நிலம்: அரசாணை வெளியீடு!

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து தவித்த இளைஞர்!

4 நிமிட வாசிப்பு

காதலிக்கு போன்: கிணற்றில் விழுந்து  தவித்த இளைஞர்!

வெள்ளி 5 ஜன 2018