மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 5 ஜன 2018

ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு: அப்டேட் குமாரு

ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு: அப்டேட் குமாரு

அதிமுக அரசு செயல்படாம டம்மியா இருக்குன்னு நெட்டிசன்ஸ் கலாய்க்குறது காதுல விழுந்துருச்சோ என்னவோ அந்தியூர் எம்.எல்.ஏ. ராஜா கிருஷ்ணன் வேட்டிய மடிச்சு கட்டிகிட்டு களத்துல இறங்கிட்டாரு. யாருய்யா இது புதுசா இருக்காருன்னு பாக்கீங்களா எனக்கும் அப்படி தான் இருந்துச்சு. போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவிச்சதும் வண்டி எடுக்க தினக்கூலி அடிப்படையில ஆள் தேவைன்னு விளம்பரம் கொடுத்தாங்கள்ல, அதைப்பார்த்து உடனே நானும் டிரைவர் தான்ப்பான்னு இறங்கி வண்டி ஓட்ட ஆரம்பிச்சுட்டாரு. இது கூட ஷாக் இல்லைங்க. கொஞ்ச நாளைக்கு முன்னால செவிலியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடந்தப்ப மருத்துவமனை பணிகள் தடைபட்டு நின்னுச்சே, அப்ப நானும் டாக்டர் தான்னு தமிழிசை இறங்கிருந்தாங்கன்னா என்ன ஆகியிருக்கும்னு நினைச்சு பார்த்தேன். ஒரு நிமிசம் தலை சுத்திருச்சு.

@CreativeTwitz

ரஜினிக்காக நடுரோட்டில் நிப்பேன் - விஷால்

// காலா பட தயாரிப்பாளருக்கு கொஞ்சம் இடம் விட்டு நின்னுங்க ப்ரோ

@Villavan Ramadoss

திடீர்னு பஸ் ஊழியர்கள் வேலையை நிறுத்தினா மக்கள் கஷ்டப்படுவங்களே, இதெல்லாம் நியாயமாஜி?

ரூபாய் நோட்டு செல்லாதுன்னு திடீர்னு மோடி சொன்னப்ப நீங்க என்ன செஞ்சீங்கஜி?

பாரத் மாதாக்கீ ஜேன்னு சொன்னேன்.

அப்படீன்னா போய் அதையே சொல்லு போ.

@Arun Pandiyan

நீங்கள் கூற விரும்பும் தத்துவத்தின் முடிவில்... ஹா ஹா ஹா ஹா சேர்த்துக் கொண்டால்... கீழே ரஜினிகாந்த் என எழுதிக் கொள்ளலாம்

@கருப்பு கருணா

யாருக்கும் பாதிப்பில்லாமல் பஜனை கச்சேரிதான் நடத்தமுடியுமே தவிர போராட்டம் நடத்த முடியாதுப்பா!

@Kannan_Twitz

அரசியலுக்கு வரேன்னு சொன்னதும் எதிர்பார்த்தது என்னவோ முதல்வன் படத்துல வர்ர மாதிரியான ரியாக்‌ஷன்தான் ஆனா நடந்தது என்னவோ பஞ்சாயத்து பால்டாயில் குடிச்சிட்டான் ரியாக்‌ஷன்தான்.

ஒருநிமிஷம்_தலைசுத்திருச்சு

@Arun Pandiyan

என்னங்கடா பொழுது போகலைனா... கமல்ஹாசன் மேல வழக்கு போட்டு விளையாடிட்டு இருக்கிங்க.

@udaya_Jisnu

ஒருத்தன் நம்மளபத்தி நல்லவிதமாவே பேசிட்டு இருக்கான்னா,

ஒன்னு அவன் நம்மகிட்ட நடிக்கிறான், இல்ல நாம அவன்கிட்ட நடிக்கிறோம்னு அர்த்தம்...

@writter_vambu

ஒரே நாளில் லட்சாதிபதியாய் ஆக வேண்டுமானால்;

அதற்கு முந்தைய நாள்

கோடீஸ்வரனாய் இருந்தால்

மட்டுமே சாத்தியம்..!

@Kozhiyaar

இன்றைக்கு போக்குவரத்துத் துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க!?

'அதனால தான் நான் எப்பவும் கார்ல வந்திடுவேன்' என்ற ரீதியில் தான் இருக்கிறது இன்று பலரது அரசியல்!!!

@HAJAMYDEENNKS

உண்மை பெரும்பாலும் நாட் ரீச்சபில் தான்..ஆனால் நிச்சயம் ஒரு நாள் லைன் கிளியராக கிடைச்சுடும்...!

@sultan_Twitz

28.நாட்கள் காலில் செருப்பு இல்லாமல் நடித்தேன் - உதயநிதி ஸ்டாலின் #

நாளைக்கு ஒருபய கேட்க முடியாது திமுக தலைவராவ என்ன தகுதி இருக்குனு!!

@rahimgazali

28 நாட்கள் காலில் செருப்பு இல்லாமல் நடித்தேன் - உதயநிதி ஸ்டாலின்

செருப்பையெல்லாம் யாரு பார்க்கறா? மூஞ்சில கொஞ்சம் நடிப்பை காட்டுங்க.

@udanpirappe

இதுவே எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடத்தப்போறோம்னு சொன்னோம்னா,

எத்தனை கோடி வேணும்னு கேப்பாங்க,

போக்குவரத்து தொழிலாளர் பிரச்சினையை சொன்னா ,தியான மோடுக்கு போய்டுவாங்க.

@கருப்பு கருணா

திடீர் போராட்டத்தை நடத்த வைத்தது இந்த அரசுதான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்

@Kozhiyaar

ஒருவரை எப்படியாவது மாற்றி விடலாம் என்ற எண்ணத்தில் ஒரு உறவில் நுழையாதீர்!!

இழப்பு உங்களுக்குத் தான்!!

அப்படியே ஏற்றுக் கொள்வதே ஆகச் சிறந்த உறவிற்கான வழிமுறை!!!

@chithradevi_91

பக்கத்து வீட்டில் கொஞ்சம் சுகர் இருந்தா தாங்களேன் என்று கடன் கேட்டவர்கள்தான் இப்போது ரெண்டு சுகர் டேப்லட் இருந்தா தாங்களேன் என்று கடன் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்

@Shanmugapriyan Sivakumar

எங்ககிட்ட இருக்கிற அந்த பெரிய பட்டான் அதை அழுத்தினா வடகொரியாவே இருக்காது - டிரம்ப் #KIDS

எங்ககிட்ட இருக்கிற ஒரு சின்ன பட்டனை அழுத்தினா அமெரிக்க சின்னாபின்னமாயிடும் - கிம் ஜம் மூன் #MAN

உங்ககிட்ட நாங்க தந்த எந்த பட்டன நீங்க அழுத்துனாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழும் - மோடி #LEGEND

@devil_girlpriya

போக்குவரத்து தொழிலாளர்களுக்கு

கொடுக்க அரசிடம் நிதி கிடையாதாம்

பிறகு எதற்கு ஆட்சி நடத்துகிறீர்கள் ... ?

ஆர்கே நகருக்கு கொடுக்கவே பத்தாது

போல.

@வாசுகி பாஸ்கர்

வருடத்தின் பாதி நாட்கள் விடுமுறையாகவும், பிரிட்டிஷ் காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பங்களா சலுகைகளோடும் உலாவரும் நீதிபதி, போக்குவரத்து ஊழியர்களை நோக்கி “வேறு வேலை பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு, brunch க்கு வர வேண்டிய அந்த போண்டாவும் சட்னியும் எங்கே என்று சப்தமிட்டார்!

@Sandy_Offfl

வெளியூர் போகும் போ பஸ் நிக்குற இடத்துல நாம சாப்பிட போனா, விலை ஜாஸ்தியா இருக்கும், தரமாவும் இருக்காது, ஆனா பஸ் டிரைவர் அன்ட் கண்டக்டர் க்கு அங்கே ஃப்ரீ

இப்போ அந்த பயணிகள் தான் நாம்

பஸ் டிரைவர் அன்ட் கண்டக்டர் தான் ஆளும் கட்சி

ஹோட்டல்க்காரன் தான் வெளிநாட்டு கார்ப்பரேட்ஸ்

@தோழன் எழிலரசன்

போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.

ஒரு கண்டக்டராக இருந்தவன் என்ற அடிப்படையில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்னு ரஜினி இன்னும் அறிக்கை விடலையா?

என்னப்பா கட்சி ஆரம்பிக்கிறாரு?

@கருப்பு கருணா

பொதுப்போக்குவரத்தை படிப்படியாக தனியார்மயம் ஆக்கணும்.கடைசியில் பேருந்தே இல்லாத பொது போக்குவரத்தை உருவாக்கணும் என்கிறார் மாலன்...

திருமால் பெருமைக்கு நிகரேது!

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

2 நிமிட வாசிப்பு

அசைவம்: அதிகம் விரும்புவது ஆண்களா... பெண்களா?

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்! ...

3 நிமிட வாசிப்பு

லக்னோ பல்கலைக்கழகப் பேராசிரியர் வளாகத்திலேயே தாக்கப்பட்டார்!

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி ...

3 நிமிட வாசிப்பு

பணவீக்கம்: உணவுப் பொருட்களின் விலை மேலும் உயரும் - ரிசர்வ் வங்கி

வெள்ளி 5 ஜன 2018